பக்கம்:நாடகத் தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சாதி :-என்பதைப்பற்றி அடியார்க்கு நல்லார் எழுதியது நம்முடைய துரதிர்ஷ்டத்தால் கிடைக்கவில்லை. இதற்கு உரை எழுதுங்கால் நமது நல்லாசிரியராகிய மஹாமஹோபாத்யாய சுவாமிநாத ஐயர் அவர்கள், இது நாடகம், பிரகரணம், பாணம், பிரஹசனம், டிமம், வியாயோகம், சமவாகாரம் வீதி, அங்கம், ஈகாமிருகமென பத்து’ என வரைந்துள்ளார்.

குறிப்பென்பது :-சுவையின் கண் தோற்றுவது.

சத்துவமாவது-அக்குறிப்பின்கண் நிகழ்கின்ற நிகழ்ச்சி.

அவிநயம்:-என்பது கதைதழுவாதே பாட்டுகளின் பொருள் தோற்றக் கைகாட்டுவதாம். இதற்கும் நாடகம் என்பதற்கும் வித்தியாசமென்னயெனின் நாடகம் என்பது கதை தழுவிவரும் கூத்தாம்.

இது இருபத்து நான்கு வகைத்தெனக்கூறி, வெகுண்டோன், ஐயமுற்றோன், சோம்பினோன், களித்தோன், உவந்தோன், அழுக்காறுடையோன், இன்பமுற்றோன், தெய்வமுற்றோன், ஞஞ்சையுற்றோன் உடன்பட்டோன், உறங்கினோன், துயிலுணர்ந்தோன், செத்தோன், மழைபெய்யப்பட்டோன், வெயிற்றலைப்பட்டோன், நாணமுற்றோன், வருத்தமுற்றோன், கண்ணுேவுற்றோன், தலைநோவுற்றோன். அழற்றிறம்பட்டோன், சீதமுற்றோன், வெப்பமுற்றோன், நஞ்சுண்டோன், இவர்களுடைய அவிநயம் இத்தன்மைத்தெனக் கூறியுள்ளார் : அடியார்க்கு நல்லார் உரையில் இவைகளின் விவரங்களைக் கண்டு கொள்க.

ஆடல்நிகழுமிடத்து அவிநயம் நிகழாமலும்
அவிநயநிகழுங்கால் ஆடல் நிகழாமலும்
களையவேண்டுமென்று அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார்.

சொல் என்பது மூவகைத்து:-உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல்.

உட்சொல் என்பது நெஞ்சொடு கூறல், இதைத்தான் ஆங்கிலேய பாஷையில் solioquy என்பர். சம்ஸ்கிருதத்தில் ஜனாந்திகம் என்பர்.

புறச்சொல் என்பது கேட்போர்க்குரைத்தலாம்.

ஆகாயச் சொல் என்பதற்கு “தானே கூறல்' என உரை எழுதப்பட்டிருக்கிறது. இது சம்ஸ்கிருதத்தில் அசரீரி வாக்கென்பதற்கு நேராகும்.

வரி என்பது எட்டுவகையாகும் :-கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/18&oldid=1285535" இலிருந்து மீள்விக்கப்பட்டது