பக்கம்:நாடகத் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

ஆளுடைய பிள்ளையார் திருவெண்காட்டுத் திருப்பதிகத்தில்

'கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப்பூதங்
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல'

எனப் பாடியிருப்பதைக் காண்க. இதற்குக் கொட்டிச்சேதம் என்று மற்றொரு பெயர் உண்டு. இக் கொடுகொட்டியைப் பற்றி சிலப்பதிகாரத்தில் நடுகற்காதையில் (564 பக்கம்.)

திரு நிலைச்சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்
செங்கணா யிரந்திருக் குறிப்பருளவுஞ்
செஞ்சடை சென்றுதிசை முகமலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை யொலியாது மென்முலையசையாது
வார்குழை யாடாது மணிக்கழல் அவிழா
துமையவள் ஒருதிறனாக வோங்கிய
இமையவனாடிய கொட்டிச் சேதம்'

என்று இக் கூத்தையாடும் விதத்தை விவரமாய் வர்ணித்திருக்கிறது.

குடை:- அவுணர்தாம் போர் செய்தற்கு எடுத்த படைக்கலங்களைப் போரிற்கு ஆற்றாது போகட்டு, வருத்தமுற்ற வளவிலே முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுகவெழினியாக நின்றாடியது குடைக்கூத்து' எனக் கூறப்பட்டிருக்கிறது.

குடம் :- காமன் மகன் அநிருத்தனை தன் மகள் உழைகாரணமாக வாணன் சிறைவைத்தலின், அவனுடைய சோ வென்னும் நகர வீதியிற் சென்று நிலங்கடந்த நீனிறவண்ணன் குடங்கொண்டாடியது” குடக் கூத்தெனக் கூறப்பட்டிருக்கிறது.

பாண்டரங்கம் :- வானோராகிய தேரில், நான்மறைக் கடும்பரி பூட்டி, நெடும்புறமறைத்து, வார்துகின் முடித்து கூர்முட்பிடித்து தேர்முனின்ற திசைமுகன் காணும்படி பாரதிவடிவாய இறைவன் (சிவபெருமான்) வெண்ணிற்றை அணிந்தாடியது' எனக் கூறப்பட்டிருக்கிறது.

மல் :- வாணனாகிய அவுணனை வேறற்கு மல்லணாய்ச் சேர்ந்தாரிற் சென்று அறை கூவி உடற்கரித்தெழுந்து அவனைச் சேர்ந்த வளவிலே, சடங்காகப் பிடித்து உயிர்போக நெரித்துத் தொலைத்தது' எனக் கூறப்பட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/21&oldid=1286380" இலிருந்து மீள்விக்கப்பட்டது