பக்கம்:நாடகத் தமிழ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

துடி :- கரியகடல் நடுவுநின்ற சூரனது வேற்றுருவாகிய, வஞ்சத்தை யறிந்து அவன் போரைக் கடந்த முருகன் அக்கடனடுவண், திரையே அரங்கமாக நின்று துடி கொட்டியாடியது துடிக்கூத்தென'க் கூறப்பட்டிருக்கிறது.

கடையம் :- வாணனுடைய பெரிய நகரின் வடக்குவாயிற் கண் உளதாகிய வயலிடத்தே நின்று அயிராணி என்னும் மடந்தை ஆடியது கடையமென்னு மாடல்' எனவும், கடையம் என்பது கடைசிக் கூத்தெனவும் கூறப்பட்டிருக்கிறது. அன்றியும் கடைசியர் வடிவுகொண்டு அயிராணி ஆடியதால் கடையம் எனப்பட்டது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பேடு :- பேடிக் கோலத்துடன் மன்மதன் ஆடிய ஆடலாம். "ஆண்மைத் தன்மையற்றிருந்த பெண்மைக் கோலத்தோடு காமனாடிய பேடென்னு மாடல்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது தனது மகன் அநிருத்தனைச் சிறைமீட்கக் காமன் சோ நகரத் தாடியது. இதனுறுப்புக்களை மணிமேகலையில்

“சுரியற்ருடி மருள்படு பூங்குழற்
பவளச் செவ்வாய் தவளவொண்ணகை
யொள்ளரி நெடுங்கண், வெள்ளிவெண் டோட்டுக்
கருங்கொடிப்புருவத்து மருங்குவளே பிறைநுதற்
காந்தளஞ் செங்கை யேந்திளவனமுலை
யகன்ற வல்குலந் நுண்மருங்கு
லிகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப்பேடு காண்குநரும்"

எனக் கூறப்பட்டிருக்கிறது காண்க.

இந்த வேடத்திற்கு இன்னின்ன அணி ஆடை முதலிய உபயோகிக்க வேண்டுமென்று இதனால் அறிகிறோம். வட்டுடை-முழந்தாளளவாக உடுக்கும் உடை. சிலப்பதிகாரத்தில் இப்பேடியின் வர்ணனை அடியில் வருமாறு காண்க.

</poem> "சுருளிடுதாடி மருள்படு பூங்குழ லரிபரந் தொழிகிய செழுங்கயல் நெடுங்கண் வரிவெண்டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச் சூடகவரிவளே யாடமைப் பணத்தோள் வளரிள வனமுலை தளரியன் மின்னிடைப் பாடகச் சீரடி யாரியப் பேடி" </poem>

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/22&oldid=1286384" இலிருந்து மீள்விக்கப்பட்டது