பக்கம்:நாடகத் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அரண்மனையைச் சார்ந்த நாடகவரங்கிற்குக் கூத்துப்பள்ளி என்ற பெயராம். கோயிலிலுள்ள கூத்தாடிடத்திற்குக் கூத்தம்பலம்’ எனப் பெயராம்.

பிறகு அந்நிலத்தை அளப்பதற்கு வேண்டிய கோல் இப்படிச் சமைத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளார். எங்ஙனம் எனின்-புண்ணிய மலைச்சாரல்களில் உயர வளர்ந்த மூங்கிலில் கணுவுக்கும் கணுவுக்கும் ஒரு ஜாண் இடையாக உள்ளதாய் உத்தமன் கைவிரல் இருபத்து நான்கு கொண்டதாயுள்ள கோலை நறுக்கி, கொள்ளல் வேண்டும் என்றார் பூர்வ ஆசிரியர். இதனால் அணு எட்டுக் கொண்டது இம்மி. இம்மி எட்டுக்கொண்டது எற்று, எற்று எட்டுக் கொண்டது. தெல்லு, நெல்லு எட்டுக்கொண்டது உத்தம புருஷ்னுடைய பெருவிரல் அளவெனவும் கூறியுள்ளார். இப்படி நறுக்கப்பட்ட கோலால், ஆடரங்கம் ஏழு கோல் அகலமும், எட்டுக் கோல் நிகளமும், ஒருகோல் குறட்டுயரமுடைத்தாயிருக்க வேண்டும் எனக் குறித்துள்ளார்.

இங்ஙனம் அமைத்த கூத்துமேடையின் மீது தூணங்கள் நாட்டப்பெற்றன. அத்தூணங்களுக்கு மேல் உத்தரப் பலகையானது பரப்பப்பட்டது, அன்றியும் அரங்கின்மேல் அகலத்துக்கிடப்பட்ட பலகையும் உளது. இவ்வுத்தரப் பலகைக்கும் அரங்கினிடத்து அகலுத்துக்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோல் உயர முடைத்தாயிருந்தது. இங்ஙனம் நிர்மிக்கப்பட்ட அரங்கமானது, உள்ளே புகவும் வெளியே போகவும் இரண்டு வாயில்கள் உடைத்தாயிருந்தது, நாடகமாடும் தலைமையிடத்திற்கு நாயகப்பத்தி என்று பெயராம். இந்நாடக அரங்கத்திற் கெதிராக, மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும், அவர்களைச் சூழ்ந்து சாதாரண ஜனங்கள் இருக்கும்படியான ஸ்தலமும் ஏற்படுத்தப்பட்டது. இவையன்றியும் கரந்து போக்கிடனும் கூத்தாடுபவர்கள் தங்குதற்குரிய பகுதியும் அரங்கத்தின் பக்கங்களிலிருந்தன. பிற்கூறிய இடத்துக்கு 'கண்ணுளர் குடிஞைப் பள்ளி' என்று பெயரிருந்தது. இவ்விடம் கூத்தாடுபவர்கள் வேஷம் தரிப்பதற்கும், கூத்தாடாத சமயத்தில் தங்கியிருப்பதற்கும் அமைத்த இடமாகும். சம்ஸ்கிரதத்தில் இதற்கு தேபத்தியம் என்று பெயராகும். ஆங்கிலேய பாஷையில் இதை 'கிரீன்ரூம்’ என்பார்.

அரங்கத்தின் மேல் நிலத்தில் நால்வகை வருணத்தார்க்குரிய அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்னும் பூதரையும் எழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/26&oldid=1287617" இலிருந்து மீள்விக்கப்பட்டது