பக்கம்:நாடகத் தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மஹோபாத்யாயர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் கூறியிருக்கிறார், அன்றியும் ஆதிகாலத்தில் கண்டத்திரை என்றும் ஒன்றுண்டு. அது பல்வர்ணத் திரையாகும். திரையை மேலே ஏற்றுங் கயிறுக்கு சூட்சக் கயிறு என்று பெயராம். நாடகவரங்கிலிடும் திரைக்கு சவணிக்கை' என்றும் பெயர் உண்டு. பெருங்கதையில் சுருக்குக் கஞ்சிகை என்று ஒர் வகைத்திரை கூறப்பட்டிருக்கிறது. இது வேண்டிய போது சுருக்கிக்கொள்ளும் திரையாம்.

மேலும் அரங்கமானது சித்திர விதானமுடைத் தாயிருந்ததெனத் தெரிகிறோம். அன்றியும் பலவித வர்ணங்களுடைய முத்து மாலைகளால் அரங்கமானது மிகவும் அழகாய் அலங்கரிக்கப்பட்டது. மேலும் அரங்கத்தில் இன்னின்னார்க்கு இவ்வளவு இவ்வளவு இடம் உண்டெனக் குறிக்கப்பிட்டிருக்கிறது. என்ன? 'ஆடிட முக்கோல், ஆட்டுவோர்க்கொருகோல், பாடுநர்க்கொருகோல், குயிலுவர் நிலையிட மொருகோல்” என நூலிற் கூறின முறை காண்க.

கூத்து நிகழ்வதற்கு ஆரம்பத்தில் அரங்கத்தின் முன்பாகத்தில் தலைக்கோல் ஒன்றைத் தாபித்தல் பூர்வீக வழக்கமென அறிகிறோம். அத்தலைக்கோல் யாதெனில், பெரும்புகழ்படைத்த அரசர்கள் யுத்தத்தில் வெல்லப்பட்டுப் புறங்கொடுத்தக்கால், அவர்களிடமிருந்து பரிக்கப்பட்ட வெண்கொற்றக் குடைக்காம்பாம்; இது வேத்தியலுக் கமைந்ததாம். பொதுவியலுக்கு அமைந்தது மாற்றார் புனத்து வெட்டிக் கொண்டுவந்த மலையின் மூங்கிலாம். இது கண்கள்தோறும் நவமணிகளாற்கட்டி, இடை நிலங்களை பொற்றகட்டால் அலங்கரித்து, அரசன் கோயிலில் காப்பமைத்து இருத்தி இதை இந்திரன் மகன் ஜயந்தனாக எண்ணி, மந்திரவிதியாலே பூசித்துவைக்கப்பட்டதாம். இத்தகையத் தலைக்கோலை கூத்து நிகழ்வதன் முன்னர், புண்ணிய நதிகளின் நீரை பொற்குடத்திலே முகந்துவந்து நீராட்டி, புஷ்ப மாலைகள் முதலியவன சூட்டி, ஆடலாசிரியன் முதலானோர் அரங்கத்தின் கண்ணை இதனை வைப்பது பூர்வீக வழக்கம். இதனை அங்ஙனம் அரங்கத்தில் வைக்குமுன், நல்ல நாளாகப் பார்த்து, அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் கையில் இதைக் கொடுத்து, பல வாத்தியங்கள் முழங்க, அரசன், ஆமாத்தியர், புரோகிதர், சேனாபதி முதலியோர் சூழ்ந்து வர, வீதியின் கண் நின்ற தேரினை பிரதட்சிணம் செய்து தேர்மிசை நின்ற கவியின் கையில் இதனைக் கொடுத்து, ஊர்வலமாக வந்து அரங்கத்தில் புகுந்து இதனை அரங்கத்தின் எதிர்முகமாக வைத்தல் அக்காலத்திய வழக்கம் நாடகக் கணிகை தலைக்கோல் கொள்ளுஞான்று புண்ணிய தீர்த்தங்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/28&oldid=1287619" இலிருந்து மீள்விக்கப்பட்டது