பக்கம்:நாடகத் தமிழ்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




என் தாய்தந்தையர்
பம்மல். விஜயரங்க முதலியார்
பம்மல். மாணிக்கவேலு அம்மாள்
ஞாபகார்த்தமாக அச்சிடப்பட்டது

நாடகத்தமிழ்

முதல் அத்தியாயம்

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என நமது தாய் பாஷையாகிய தமிழானது, மூவகையாய் நமது முன்னோரால் பிரிக்கப்பட்டது யாவரும் அறிந்த விஷயமே. ஆயினும் சற்றேறக் குறைய நாற்பது வருடங்களுக்கு முன், நாடகத்தமிழ் என்று ஒரு பிரிவு இருந்ததோ என்றே சந்தேகிக்கும்படியான கூணதிசைக்கு நமது தாய் மொழியாகிய தமிழ்மொழி வந்துவிட்டது. அச்சமயத்தில் நாடகத் தமிழைப்பற்றி எழுதப்புகுவான் ஒருவன், இவ்வாண்டு தேசத்தில் சர்ப்பங்களைப்பற்றி எழுதப்புகுவான் ஒருவன் 'இத்தேசத் தில் சர்ப்பங்கள் இல்லை' என்று எழுதி முடித்ததைபோல், தமிழ் பாஷையில் நாம் அறிந்தவரை நாடகமே இல்லை, என்று ஒருவாறு எழுதி முடித்திருக்கலாம். இக்கஷ்ட திசைக்குத் தேனினும் இனியதெனும் நம் தமிழ் மொழி வந்ததற்கு முக்கிய காரணம் நமது பழமையான நாடகத் தமிழ் நூல்களே, ஆதரிப்பாரும் அன்புடன் கற்பாருமின்றி இறந்துபட்டதேயாகும். புராதனமான நாடக நூல்கள் பெரும்பாலும் அழிந்து போயினமையாலும், எஞ்சிநின்ற சில, அந்நூலுடையோரால், அவற்றின் அருமை தெரியாமையாலோ அல்லது வேறெக் காரணத்தினாலோ, வெளிக்குக் கொணரப்படாது மறைக்கப்பட்டமையாலும், சமஸ்கிருதம் முதலிய இதர பாஷாபிமானிகள் தமிழில் நாடகம் என்பதில்லை என்று குறைகூற இடங்கொடுத்தது. தற்காலத்தில் சில வருடங்களாக, பூர்வத்தில் பூமியின்கண் புதைக்கப்பட்ட பெரும் நிதிகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தி உலகிற்கு உபயோகப்படும்படிச் செய்பவர்களைப் போல், நமது தமிழகத்தில் ஆங்காங்கு மறைந்து மங்கிக் கிடந்த அரிய பெரிய தமிழ் நூல்களே, தம்முடைய உடல் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/3&oldid=1282996" இலிருந்து மீள்விக்கப்பட்டது