பக்கம்:நாடகத் தமிழ்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

 நாட்டியத்திற்குத் தென் தேசத்தில் பரத நாட்டியம் என்று பெயர் வழங்குதல் இச்சந்தர்ப்பத்தில் கவனிக்கத்தக்கது.

அன்றியும் புராதன கிரந்தங்களாகிய மாபுராணம், பூதபுராணம், என்னும் நூல்களிலும் கூத்தைப்பற்றிய இலட்சணங்கள் கூறியிருப்பதாக அறிகிறோம். இவ்விரண்டு நூல்களும் அகத்தியத்தைப் போலவே முன்பே இறந்துவிட்டன. இவற்றிற்கு முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்னும் பழைய நாடகத்தமிழ் நூல்கள் இருந்தனவாக அறிகிறோம். இவைகளைப்பற்றி அடியாருக்கு நல்லார் எழுதும் பொழுது இவற்றினுள் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது, முதல், நடு, இறுதி காணாமையின் அவையும். இறந்தன போலும்” என்று அறிவிக்கின்றார். மேற்கூறியவற்றுள் செயிற்றியம் என்பது செயிற்றியனார் என்பார் ஒருவரால் செய்யப்பட்ட நூல் என்று நாம் அறிய இடமுண்டு. அப்படியே சயந்தம் என்னும் நூலும் சயந்தன் என்பவரால் எழுதப்பட்டது என்று ஊகிக்கலாம் என்று எண்ணுகிறேன். செயிற்றியம் சூத்திரமாக செய்யப்பட்டது என அறிகிறோம்.

மேற்கூறியவைகள் நீங்கலாக, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்தில் பொன்றாது நின்ற நாடகத் தமிழ் நூல்கள் புரதசேனாதிபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என இரண்டாம் இவற்றுள் முன்னதன் ஆசிரியர் ஆதிவாயிலார் என்பார்; இது வெண்பாவாற் சேய்யப்பட்ட நூல்; பின்னது, மதிவாணனர் என்பவரால் சூத்திரப் பாவாலும் வெண்பாவாலும் செய்யப்பட்ட நூல்; இவையிரண்டும் அடியார்க்கு நல்லார் உரை எழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட நூல்கள் மதிவாணர் நாடகத்தமிழ் நூலானது கடைச்சங்கக் காலத்து பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணானர் செய்த முதல் நூல்களிலுள்ள வசைக் கூத்திற்கு, மறுதலையாகச் செய்யப்பட்ட புகழ்க் கூத்திலக்கண நூல் என்றும் அறிகிறோம். இவ்விரண்டு நாடக நூல்களும் தற்காலம் காணப்படாமையால், அடியார்க்கு நல்லார் காலத்திற்குப் பிறகு நம்முடைய துர்அதிர்ஷ்டத்தால் இறந்து போயின என்று எண்ணவேண்டியிருக்கிறது.

கூத்தநூல் என்னும் ஒரு நூலைப்பற்றி அடியாருக்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார், இதுதான் மதிவாணர் செய்த நாடகத் தமிழ் நூல் என்று காலஞ்சென்ற தமிழ் வித்வான் ஆ.சிங்காரவேலு முதலியார் அவர்கள் எண்ணுகின்றார். காலஞ்சென்ற திருமணம் செல்வகேசவராய முதலியார் அவர்கள் இது வேறு நூல், என்று கூறியுள்ளார். இவ்விரண்டில் ஒன்றை நிச்சயமாகக் கூறுவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/5&oldid=1283011" இலிருந்து மீள்விக்கப்பட்டது