பக்கம்:நாடகத் தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

தமிழ் நாடகங்கள்

இனி பண்டைக்கால முதல் இன்னின்ன கதைகள் நாடகங்களாகத் தமிழில் ஆடப்பட்டன என்பதை ஆராய்வோம். பூர்வ காலத்தில் ஆடப்பட்ட நாடகங்கள் புராணக்கதை சம்பந்தமானவை என்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. அல்லியம் கொடுகொட்டி முதலிய ஆடல்களைப் பற்றி முன்பே கூறியுள்ளோம். கதை தழுவி நாடகமாக ஆடிய கூத்துகளில் 'வள்ளிக் கூத்து' என்பது ஒரு மிகப் பழமையானது என்று நாம் கூற வேண்டும். இதைப்பற்றித் தொல்காப்பியத்தின் உரையில் குறிப்பிட்டிருப்பதை முன்பே கவனித்திருக்கிறோம். முருகக் கடவுள் வள்ளியம்மையை மணந்த கதையே வள்ளிக் கூத்தாம். அக்காலத்தில் இதனை வள்ளி நாடகம் என்று பெயரிட்டழைக்காது வள்ளிக் கூத்து, என்று கூறப்பட்டிருக்கிறது இங்கு முக்கியமாய்க் கவனிக்கத்தக்கது. ஸ்ரீகண்ணபிரான் சிறு பருவத்தில் பலதேவரோடும் நப்பின்னைப் பிராட்டியோடு மாடிய ஆடல்கள் நாடகங்களாகப் பூர்வ காலத்தில் ஆடப்பட்டன என்பதும் தெரியவருகிறது. இவை 'பால சரிதை நாடகம்' என்று கூறப்பட்டுள்ளன. பால சரிதை நாடகம் என்பதற்கு பிள்ளைச் சரித நாடகம் என்று உரையாசிரியர் உரை எழுதியுள்ளார்.

இதற்குப் பின் நான் இதுவரையில் ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த தமிழ் நாடகத்தின் பெயர், "ராஜராஜேஸ்வர நாடகம்" என்பதாம். இது தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலின் வடக்குப் பிரகாரத்தின் வெளியிலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகத்தைத் திருவாளன் திருமுதுகுன்றான விஜய ராஜேந்திர ஆசாரியன் என்பவனைத் தலைவனாக உடைய சில நபர்களால் அக்கோயிலில் வைகாசி மாசம் திருவிழாவில் ஆடுவதற்காக இவ்வளவு தான்யம் கொடுக்கப்பட்டதென்று வரையப்பட்டிருக்கிறது. அதில் எழுதியிருப்பது அடியில் வருமாறு :

"திருவாளன் திருமுது குன்றான விஜயராஜேந்திர ஆசாரியன் உடையார், வைகாசிப் பெரிய திருவிழாவில், ராஜராஜேஸ்வர நாடகமாட, இவனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும், காணிய கப்பங்கு ஒன்றுக்கும், ராஜகேசரி யோடொக்கும், ஆடவல்லான் என்னும் மரக்காலால் நித்த நெல்லுத் துணியாக நூற்றிருபதின் கல நெல்லும், ஆண்டாண்டுதோறும் தேவர் பண்டாரத்தே பெறச் சந்திராத்யர். . ...கல்வெட்டித்து', 'ஸ்ரீராஜராஜேஸ்வரமுடையார் கோயிலில் ராஜ ராஜேஸ்வர நாடகமாட நித்தநெல்லுத் தூணியாக நிபந்தம் செய்த, நம் வாய்க்

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/51&oldid=1540553" இலிருந்து மீள்விக்கப்பட்டது