பக்கம்:நாடகத் தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

னாயினும், இந்நாடகக் கதையைப் பற்றி இவ்வாறு கூறியது சரியென என் சிற்றறிவிற்குப் புலப்படவில்லை யென்றே நான் கூறவேண்டும். ஒருகால் இந்நாடகக் கதை ராஜராஜ சோழன் கொண்ட வெற்றியைப் பற்றியதாயிருக்கலாம்; இன்னும் நமக்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கும் வரையில் கதை இன்னதென்று சொல்ல முடியாதென்று கூறுதலே தகுதியாம். இந்நாடகத்தைப் பற்றி ஏதேனும் வேறு விபரம் கிடைக்குமா என்று நான் தஞ்சைக்குச் சென்று எத்தனையோ பெயரைக் கேட்டும் ஒன்றும் கிடைத்திலது. கோயிலில் விசாரிக்குமிடத்து, தற்காலம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் அஷ்டக்கொடி உற்சவம் எனும் ஒரு தினத்தில் "சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்" எனும் ஓர் நாடகம் ஆடப்படுவதாக அறிந்தேன். இது ஒண்டபுரம் சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப்பட்டது. இந்நாடகம் தற்காலம் தாசிகளாலே ஆடப்படுகிறது. குறவஞ்சி என்பது பிற்காலத்தில் வந்த ஓர் நாடகப் பகுதியாகக் காண்கிறது. குறவஞ்சிகளைப் பற்றி பிறகு கூறுகிறேன்.

பூர்வ காலத்தில் கோயில்களின் உற்சவ சமயத்தில் தமிழ் நாட்டில் தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டன வென்பதற்கு இன்னொரு உதாரணம் கிடைத்துள்ளது. திருநெல்வேலி ஜில்லாவில் பட்டமடை எனும் கிராமத்தில் ஸ்ரீவல்லீஸ்வரம் எனும் கோயில் கல்வெட்டுகளில் அக்கோயில் அதிகாரிகள் உய்யவந்தாள் அழகிய யசோதை எனும் தாசிக்கு, உற்சவ காலங்களில் நாடகமாடுவதற்காக, கொஞ்சம் பூமி மான்யமாகக் கொடுத்ததாக வரையப்பட்டிருக்கிறது. இதனால் நாம் அறியக்கூடிய விஷயங்கள், அக்காலத்தில் கோயில்களில் தாசிகள் நாடகமாடும் வழக்கம் உண்டென்றும், அவர்களுக்குப் பரம்பரையாக அவர்களனுபவித்து வர மான்யங்கள் விடப்பட்டனவென்பதுமாம். ஆயினும் நமது துர் அதிர்ஷ்டத்தால் இப்படி நடத்தப்பட்ட நாடகத்தின் பெயரும் நமக்குக் கிடைத்திலது. இச்சந்தர்ப்பத்தில் நாம் கவனிக்கத்தக்கது என்னவெனில், பூர்வ காலத்தில் அநேக ஸ்தலங்களில் அந்தந்த ஸ்தல புராணக் கதைகளே நாடக ரூபமாகத் தமிழில் அவ்வக்கோயில் தாசிகள் ஆடினர் என்பதாம்.

இதற்குப் பிறகு சுமார் பதினேழாம் நூற்றாண்டின் கடைசியில் 1695இல் முதல் சில நொண்டி நாடகங்கள் இருந்ததாக அறிகிறோம். திருக்கச்சூர் நொண்டி நாடகம் " என்பது ஒன்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்நாடகக் கதை என்னவெனில், கதா நாயகன் துன்மார்க்கனாயிருந்து, வேசிகள் வலையிற் சிக்கி, பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/53&oldid=1290147" இலிருந்து மீள்விக்கப்பட்டது