பக்கம்:நாடகத் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

இதற்குப் பிறகு தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜா சரஸ்வதி மஹாலில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் புத்தகசாலையில் ஏட்டுப் பிரதிகளாக சில தமிழ் நாடகங்கள் கிடைத்துள்ளன. அவைகளில் "மதன சுந்தர பிரசாத சந்தான விலாசம்" என்பது ஒன்று, இது அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இவர் ராமநாடகம் இயற்றிய அருணாசலக் கவிராயர் அல்லவென்றும் அப்பெயர் கொண்ட வேறொருவர் என்றும் எண்ணவேண்டியிருக்கிறது. வட மொழியில் காளிதாசர் கீர்த்தியடைந்த பிறகு அநேக காளிதாசர்கள் கிளம்பியதாக அறிகிறோம், அதுபோல் அருணாசலக் கவிராயர் புகழடைந்த பிறகு மற்றவர்கள் அவர் பெயரைப் பூண்டாவது, அல்லது தாம் இயற்றிய நூலுக்கு அவரை ஆசிரியராகவாவது ஆக்கியிருக்கலாம். இந்த நாடகமானது தஞ்சாவூரில் அரசு புரிந்த ஒரு சோழ அரசனுடைய மகள் சுகமாய் வாழ்ந்திருக்கவேண்டி மதன சுந்தரேஸ்வரரைப் பூசித்து வரம் பெற்றக் கதையை கூறுவதாம். இதில் "சித்தமகிழ்ந்து சிவாஜி ராஜேந்திரன் உத்திரவுபடி உலகினிலோங்கிட அருணசலக் கவி அன்புடன் உரைத்த திருவளர் நாடகம்" என்று எழுதியிருப்பதால், 1883 முதல் 1855 வரை அம்மன்னன் தஞ்சையில் ஆண்டமையால் இதன் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையெனக் கூறலாம்.

புரூரவ சக்கரவர்த்தி நாடகம்: இன்னொன்று, இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நாடகக்கதை பாரதக் கதையை தொடர்ந்ததாகும். சந்திர வம்சத்துதித்த புரூரவன் தன் அரசையும் மனைவி மக்களையுமிழந்து பல துன்பங்கள் அனுபவித்து கடைசியில், எல்லாவற்றையும் முன்போல் பெற்ற கதையைக் கூறுவதாம். காளிதாச மகாகவி எழுதிய விக்ரமோர்வசியம் எனும் நாடகத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. மற்றொன்று அரிச்சந்திர நாடகம் என்பது, இதன் ஆசிரியர் மறையவர்குல வீரலிங்க பாரதி என்று அறிகிறோம். இந்த ஆசிரியரே சிறுத்தொண்டர் நாடகம் ஒன்றும் இயற்றியதாக எண்ண இடமுண்டு. இதன்றி ஆசிரியர் பெயர் தெரியாத இன்னும் சில அரிச்சந்திர நாடகங்கள் ஏட்டுப் பிரதிகளாயிருக்கின்றன. சாரங்கதர நாடகத்திற்கு மூன்று ஏட்டுப் பிரதிகள் இருக்கின்றன. இவைகளின் ஆசிரியர் பெயர்கள் விளங்கவில்லை. பாண்டி கேளிவிலாச நாடகம் என்று ஒரு புஸ்தகமும் இருக்கின்றது. இதை இயற்றியவர் நாராயண கவி, தஞ்சாவூரை யாண்ட சிவாஜி மகாராஜா கேட்டுக்கொண்டபடி இந்நாடக ஆசிரியர் இதை இயற்றியதாக அறிகிறோம். இவைகளெல்லாம் இன்ன வருஷங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/55&oldid=1290149" இலிருந்து மீள்விக்கப்பட்டது