பக்கம்:நாடகத் தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

நாடகமே. இந்நாடகத்தை இயற்றியவர் காசி விஸ்வநாத முதலியார் என்பவர்; இவர் ஆங்கிலம், தமிழ். சம்ஸ்கிருதம் மூன்று பாஷையும் நன்குணர்ந்தவர்; சென்னையில் வசித்திருந்தவர்; காலஞ்சென்ற என் அருமைத் தந்தையாருக்கு இவரை நன்றாய்த் தெரியும். இந்நாடகத்தின் ராகதாளங்களே அமைப்பதற்குத் துணையாயிருந்தவர் தாயுமான முதலியார் என்பவர். இவரை நான் நேரிற் பார்த்து இவருடன் இந்நாடகத்தைப் பற்றிய பல கதைகளைக் கேட்டிருக்கிறேன். அவைகளே விரித்துரைக்க இங்கு இடமுமில்லை, அவகாசமுமில்லை. ஆயினும் இந்நாடகத்தைப்பற்றி முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது, அஃதென்னயெனின், சென்னையைச் சார்ந்த சிந்தாதிரிப் பேட்டையில் முருகப்ப முதலியார் என்பவர், ஒருவர் இருந்தார், அவர் துளுவ வேளாள வம்சத்தைச் சார்ந்தவர். அவருடைய பிள்ளை அவர் வைத்துவிட்டுப்போன ஏராளமான ஆஸ்தியை அழித்து விட்டார் வஸ்தவமாக நடந்த இவரது கதையையே நாடகமாக எழுதி, அவருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் புத்தி வரும்படியாக ஒர் சிறந்த எண்ணத்துடன், இந்நாடக ஆசிரியர் இந்நாடகத்தை எழுதினர். இன்றும் சிங்தாதிரிப்பேட்டையில் ஒரு வீட்டிற்கு டம்பாச்சாரி வீடு என்று வழங்குகிறது. இந் நாடகமானது சிறந்த புத்திமதியைப் புகட்ட எழுதிய நாடகம். ஆயினும் தற்காலம் இந்த நாடகமானது கல்வியறிவில்லாக் கீழ்ப்பட்ட பாமர ஜனங்களால் நடிக்கப்பட்டு மிகவும் ஆபாசமாக்கப்படுகிறது. நாடக ஆசிரியர் எழுதாத சில ஆபாசமான விஷயங்களை யெல்லாம் இதனுடன் சேர்த்து, கற்றுணர்ந்தோர் கடியும்படியான விஷயமாக் கப்பட்டுள்ளது. இந்த தமிழ் நாடக ஆசிரியராலியற்றப்பட்ட மற்ற இரண்டு நாடகங்கள்:- பிரம்ம சமாஜ நாடகம் என்பதும், தாசில்தார் நாடகம் என்பதுமாம். இவைகளும் பொதுஜன விஷயமாக, தமது நாட்டாரைச் சீர்திருத்தவேண்டி எழுதப்பட்டவைகளாம். பிரம்ம சமாஜ நாடகத்தில் தற்காலத்தில் தமிழ் நாட்டில் அதிக குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கும், பிராம்மணர்-பிராம்மணர் அல்லாதார் கட்சி, விதவா விவாகம், முதலிய பல விஷயங்களைப்பற்றி மிகவும் விமரிசையாய் நாடக ஆசிரியர் வரைந்திருக்கிறார்.

முன்னால் நாம் கவனித்த டம்பாச்சாரி விலாசம் என்பது மிகவும் கீழ்ப்பட்ட ஸ்திதிக்கு வந்ததைக்கண்ட காலஞ்சென்ற ம-ள-ள-ஸ்ரீ ராமஸ்வாமி ராஜு என்பவர் பிரதாபசந்திர விலாசம் என்று ஒரு தமிழ் நாடகத்தை 1877 வருஷத்தில் எழுதினார். இவர் தமிழ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/63&oldid=1290159" இலிருந்து மீள்விக்கப்பட்டது