பக்கம்:நாடகத் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சம்ஸ்கிருதம், ஆங்கிலம் எனும் மூன்று பாஷைகளிலும் தேர்ச்சி பெற்றவர். இங்கிலாந்துக்குப் போய்த் திரும்பி வந்தவர்; சங்கீதத்தில் தேர்ச்சியடைந்தவர்; தனது மேற்கூறிய நாடகத்துக்கு வேண்டிய பாட்டுகளைத்தானே கவனம் செய்து, ராக தாளங்களை அமைத் திருக்கிறர். நாடக நாயகனை, டம்பாச்சாரி விலாசத்திலிருப்பது போல் கல்வியறிவு இல்லாதவனாயல்லாது, கற்றறிந்தவகை ஏற்படுத்தியுள்ளார். இந்த நாடகமானது சில சமயங்களில் மேடையில் ஆடப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன், இந்நாடகத்தின் முதற்பதிப்பு சில வழிந்து போக ம-ள-ள-ஸ்ரீ திவான் பஹதூர் எம். எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்கள் இதை மறுபடியும் அச்சிட்டிருக்கிறார். இதற்குப் பிறகு அப்பாவு பிள்ளை என்பவர் சில தமிழ் நாடகங்களை இயற்றி அச்சிட்டிருக்கின்றனர். அவற்றுள் சத்திய பாஷா அரிச்சந்திர விலாசம் என்பது இந்நாள் வரையில் அந்நாடகத்தை ஆடுபவர்களுக்கு மிகவும் உபயோகப்பட்டு வருகிறது. கதை யானது பழைய மார்கத்தை ஒட்டியிருந்தபோதிலும், இவரால் இயற்றப்பட்ட புதிய வர்ணமெட்டுகளுள்ள பாடல்கள் நாடகாபிமானிகளால் சிலாகிக்கப்பட்டிருக்கின்றன. 1886 வருஷம் சோழ விலாசம் எனும் நாடகத்தை இவர் எழுதி அச்சிட்டிருக்கிறார். இவர் 1889 வருஷம் இந்திரசபா எனும் ஒர் நூதன நாடகத்தைத் தமிழில் இயற்றியுள்ளார். இது பல வருஷங்களுக்கு முன் சென்னைக்கு வந்த பாரசீக நாடகக் கம்பெனியார் ஆடிய கதையாகும்; அதைத் தழுவி தமிழில் இந்நாடகத்தை இயற்றியுள்ளார். 1894 வருஷம் இந்நாடக ஆசிரியர் "பத்மினி சபா' எனும் நாடகத்தை அச்சிட்டார்.

1892 வருஷம் ரத்னாவதி நாடக அலங்காரம் எனும் தமிழ் நாடகம் அச்சிடப்பட்டது. இதை இயற்றியது மகாலிங்க பாரதியார் குமாரத்தி ஆதிலட்சுமு அம்மாள் அவர்கள்; இதன் கதை திரிசிரபுரத்தில் தாயுமான சுவாமி கோயில் ஸ்தல மஹாத்மியமேயாம். இது தான் நான் அறிந்த வரையில் பெண்பாலால் முதல் முதல் இயற்றப்பட்ட தமிழ் நாடகம். இதுவும் பழைய மாதிரியைத் தழுவி எழுதப்பட்டதாகும்,

சற்றேறக்குறைய நாம் ஆராய்ந்து வந்த இக்காலத்தில் குறவஞ்சி நாடகம் எனும் ஓர் நாடகப் பிரிவு வழக்கத்திலிருந்ததை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. குறவஞ்சி நாடகத்தில், ஓர் அரசனோ அல்லது தேவதையோ பவனி வருங்கால் அவரைக் கண்ட ஒரு பெண் மணி அவர் மீது காதல்கொண்டு வருந்த, ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/64&oldid=1290177" இலிருந்து மீள்விக்கப்பட்டது