பக்கம்:நாடகத் தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கிங் லீயர் எனும் மற்றொரு சிறந்த நாடகத்தை கே.ராமசாமி ஐயங்கார் அவர்கள் மொழிபெயர்த்திருக்கின்றனர். இதற்கு 'மங்கையர் பகட்டு' என்று பெயர் வைத்திருக்கின்றனர். 1921 வருஷம் இது வெளிவந்தது. இன்னும் காமெடிஆப் எர்ரர்ஸ் எனும் நாடகமும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. "யுத்தலோலன்” என்பதை எழுதிய நூலாசிரியராகிய மேற்சொன்ன பி. எஸ்.துரை சாமி ஐயங்கார் ரோமியோ அண்டு ஜூலியெட் எனும் நாடகத்தை ரம்பனும் ஜொலிதையும், எனும் நாடகமாக மொழிபெயர்த்திருக்கின்றனர், இதை நான் வாசித்திருக்கிறேன், இது சுகுண விலாச சபையாரால் ஒருமுறை ஆடப்பட்டும் இருக்கிறது. ஆயினும் நான் அறிந்தவரையில் இது இன்னும் அச்சிடப்படவில்லை. "சிம்பலைன்' எனும் சரித்திர சம்பந்தமான நாடகத்தை காலஞ்சென்ற சரச லோசன செட்டியார் என்பவர் தமிழில் அமைத்து சரசாங்கி எனும் பெயரிட்டு 1897-வருஷம் அச்சிட்டிருக்கிறார். இதே நாடகத்தை "சிம்ஹளநாதன்' எனப்பெயரிட்டு நான் தமிழில் அமைத்து 1914 வருஷம் அச்சிட்டிருக்கிறேன். இதே நாடகத்தை ஜி.ஜோசெப் எனும் ரங்கூன்வாசி 1918 வருஷம் 'பாண்டியராஜன்'எனும் பெயருடைய தமிழ் நாடகமாக இயற்றியுள்ளார். மேற்குறிப்பிட்டவை களன்றி ஷேக்ஸ்பியர் மகாகவியின் நாடகங்களை நான் தமிழில் அமைத்துள்ளன மகபதி (Macbeth) விரும்பியவிதமே (As you like it) எல்லாதேசத்து நாடகக்கவிகளாலும் தமதுசிரோரத்தனமாகக்கொள் ளப்பட்ட இந்த ஷேக்ஸ்பியர் நாடக கவியின் மற்ற ஆங்கில நாடகங்களையும் தமிழில் அமைத்தாவது மொழி பெயர்த்தாவது வெளியிட்டால், தமிழ் நாடகாபிமானிகளுக்கு ஒரு பேருதவியாம் என்பதற்குச் சந்தேகமே யில்லை.

இனி ஷேக்ஸ்பியர் மஹாகவியைவிட்டு மற்ற ஆங்கிலகவிகளின் நாடகங்களின் தமிழ் அமைப்பைப்பற்றிக் கருதுவோம். 1902-வருஷம் என். ஆர்.கே.தாதாசாரியர் என்பவர் மில்டன் என்பவருடைய "கோமஸ்" எனும் கதையைத் தமிழில் நாடக ரூபமாக "குணமாலிகை"எனும் பெயரிட்டு வெளியிட்டிருக்கின்றனர். எனது நண் பருள் ஒருவராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் என்பவர், ஹென்றிவுட் (Henry Wood) துரைசாணி யவர்கள் இயற்றிய 'ஈஸ்ட்லின்' எனும் நவீனத்தைத்தழுவி "சபலா" எனும் நாடகத்தைத் தமிழில் இயற்றியுள்ளார்.

இனி சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்களைக் கருதுவோம். சமஸ்கிருத நாடகங்களிலெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/70&oldid=1290233" இலிருந்து மீள்விக்கப்பட்டது