பக்கம்:நாடகத் தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

தமிழ் நாடகமாடுபவர்களும் நாடகக் கூட்டங்களும்

இனி தமிழ்நாடகம் ஆடினவர்களையும், நாடகங் கூட்டங்களையும் பற்றி சிறிது ஆராய்வோம். சிலப்பதிகார காலத்தில் மாதவியைப் பற்றிக் கூறுமிடத்து "நாடகக் கணிகை" எனக் கூறப்பட்டிருக்கிறதை முன்பே குறித்திருக்கிறோம். அக்காலத்தில் நிருத்தம், நாட்யம், நாடகம் எல்லாம் கூத்தின் வகையாகக் கருதப்படடிருந்தது கவனிக்கற்பாலது. இவள் பாரதியாகவும், கிருஷ்ணனாகவும், முருகனாகவும் காமனாகவும், துர்க்கையாகவும், அயிராணியாகவும், அவரவர் அணியுடன், அவரவர் கொள்கையின், நிலையும் படிதமும் நீங்காமரபில், ஆடினதாக அறிகிறோம், அன்றியும் கொடுகொட்டிக் கூத்தை, கூத்தச் சாக்கையனாடியதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இதன்பிறகு சுமார் தொள்ளாயிரம் வருஷங்களுக்குமுன் திருவாளன் விஜயராஜேந்திர ஆசாரியன் ராஜராஜேஸ்வர நாடகம் என்பதைத் தஞ்சாவூரில் நடத்தியதாக முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். இவனைப்பற்றிய கல்வெட்டுகள் முன்பே வரைந்திருக்கிறேன்; இக்கல்வெட்டுகளினால் நாம் இவனைக் குறித்த பல விஷயங்கள் அறிய இடமுண்டு; முதலில் இவனது பெயர் திருவாளன் திரு முதுகுன்றனை விஜயராஜேந்திர ஆசாரியன் என்றிருக்கிறது. தற்காலத்தில் பிராம்மணர் அல்லாதார் தங்கள் பெயரின் முன் திருவாளன் என்று எழுதிக்கொள்ளுகிற வழக்கம் நூதனமன்று போலும். இரண்டாவது இவனது ஊர் முதுகுன்றமாம். முதுகுன்றம் என்பது விருத்தாசலம் எனும் ஊராகும். மூன்றாவது இவன் பெயர் விஜய ராஜேந்திரன் என்றிருப்பதால், அக்காலத்திய பிரபலமான சோழ அரசர்களுடைய பெயரைக் குடிகளும் வைத்துக்கொள்வது வழக்கமென அறிகிறோம். ஆசாரியன் என்று இவன் பெயருடன் எழுதியிருப்பதால் நாடகக் கலையைப் பிறருக்கும் கற்பிப்பவன் என்கிற பொருள் விசிதமாகிறது. பிறகு இவன் பிராம்மணனல்லவென்று ஊகிக்கவும் இடங்கொடுக்கிறது, இவனுக்கும் இவன் வர்த்தகத்தார்க்கும் என்று கூறி இருப்பதினால், இவன் ஒரு நாடகக் கூட்டத் தலைவனாக இருந்திருக்கவேண்டுமென்று. புலப்படுகிறது, அன்றியும் மேற்சொன்ன நாடகம் வருஷத்திற்கொருமுறையே ஆடினபோதிலும் அதற்காக தினம் ஒரு துணி நெல் பெற்றதாகத் தெரிகிறது, இதனால் அக்காலத்தில், ஆடல் பாடல் முதலியவைகளை பயின்றவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/73&oldid=1291603" இலிருந்து மீள்விக்கப்பட்டது