பக்கம்:நாடகத் தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கள் மற்ற நாட்களில் உணவிற்கு கஷ்டப்படாதபடி, தினம் ஊதியம் பெற்றனரென்பதும் வெளியாகிறது, ஆயினும் இவ்வூதியமானது பெரிதல்ல என்பதை நாம் இங்கு கவனிக்கவேண்டும். நாடகமாடுவது மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டிருந்தால் இத்தனை கழஞ்சு பொன் என்று கொடுக்கப்பட்டிருப்பான். அதைவிட்டு தினம் தனக்கும் தன் வர்த்தகத்தார்க்கும் ஒரு தூணி நெல் பெற்றதினால் அக்காலத்தில் நாடகமாடுதல் அதிக மேம்பட்டதாகக் கருதப்படவில்லையென்று நாம் அனுமானிக்க இடம் கொடுக்கின்றது. இவனை சாந்திக் கூத்தனென்று அழைத்திருப்பதைப்பற்றி கவனித்துள்ளேன்.

பின்பு ஸ்ரீவல்லிஸ்வரத்தில் உய்யவந்தாள் அழகிய யசோதை என்னும் தாசியானவள் நாடகமாடியதாக அறிந்திருக்கிறோம்,

இதற்குப்பின், கடந்த நூற்றாண்டிற்குள் இருந்த நாடகங்களைப் பற்றியும் நாடகக் கூட்டங்களைப் பற்றியும் தான் கருதல் வேண்டும். இதற்கு இடையில் நடர்களும் நாடகக்கூட்டக் குழுக்களும் இல்லாமற் போகவில்லை, ஆங்காங்கு இருந்திருக்க வேண்டுமென்பது திண்ணம்; ஆயினும் மேற்கூறியபடி நாடகம் ஆடுதல் மிகவும் கீழ்ப்பட்ட ஸ்திதிக்கு வந்தபடியால், அந்த நாடகங்களை ஆடுபவர்கள் மதிக்கப்படாது அவர்களது பெயர் முன்னுக்கு வரக் காரணமில்லா மற்போயிற்றெனவே கருதவேண்டும், இவ்வாறு மிகவும் இழிந்த ஸ்திதிக்கு வந்தமையால் தமிழ்நாட்டில் நாடகமாடுபவர்களுக்குத் 'தெருக்கூத்தாடிகள்'; என்கிற பெயரே வந்துவிட்டது. இவர்கள் ஆடுவதற்கு ரங்கம் என்பதே கிடையாது. நடுத்தெருவில் அல்லது கோயில்களைச் சார்ந்த வெளி நிலங்களில் அல்லது களத்துமேடுகளில், இவர்கள் நாடகமாடுவது வழக்கமாயிற்று; இத்தெருக்கூத்தாடிகள் ஆடும் நாடகங்கள் மத சம்பந்தமான கதைகளாகத்தான் பெரும்பாலும் இருக்கும். இரணியவிலாசம், மார்க்கண்டேய நாடகம், ராம நாடகம், பாரதவிலாசம் முதலியன இவர்கள் சாதாரணமாய் ஆடுவார்கள்.

இத்தெருக்கூத்தானது அநேக நூற்றாண்டுகளாக நமது கிராமாந்திரங்களில் ஆடப்பட்டு வருகின்றது என்பதற்குச் சந்தேக மின்று; ஆயினும் தற்காலத்திய நாகரீகமானது கிராமங்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ, இத்தெருக்கூத்துகளிலுள்ள பழைய வழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன, அன்றியும் இன்னும் சில வருடங்களுக்குள் இவை முற்றிலும் அற்றுப்போகும் என்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/74&oldid=1291611" இலிருந்து மீள்விக்கப்பட்டது