பக்கம்:நாடகத் தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 மெய்க்கூத்தாவது மெய்த் தொழிற்கூத்தாம் ; இது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இவை அகச்சுவை பற்றியதாதலின் அகமார்க்கம், என்றறையப்படும். அகச்சுவை, ராஜசம், தாமதம், சாத்துவிகம் என மூவகைத்து எனக் கூறப்பட்டிருக்கிறது. இப்பிரிவுகளின் பெயர்களை ஆராயுமிடத்து அவை வழங்கும் நிலங்களைப் பொறுத்ததாயிருக்கக் கூடுமெனத் தோன்றுகிறது. வடுகு என்பது வடக்குப் பிரதேசத்திலும், சிங்களம் என்பது சிங்களத் தீவிலும் பெரும்பாலும் அக்காலத்தில் வழங்கிவந்த வகையினைக் குறிப்பதாயிருக்கலாம்.

அவிநயக் கூத்தாவது கதையினத் தழுவியதாயிராது, பாடும் பாட்டிற்கு ஒத்தட்டி கைகாட்டி வல்லபஞ் செய்யும் கூத்து, எனக் கூறப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும் இப்படிப்பட்டக் கூத்திற்கு அபிநயம் பிடித்தல் என்னும் பெயர் சாதாரண வழக்கில் இருப்பது கவனிக்கத்தக்கது.

நாடகக்கூத்து-கதை தழுவிவரும் கூத்தெனக் கூறப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் நாடகம் என்னும் சொல் இதனையே குறிப்பதாகும். கூத்து என்கிற முற்காலத்தில் பல்வேறு ஆடல்களைக் குறித்த பொதுச் சொல்லானது, தற்காலத்தில் நாடகக் கூத்தினைப் பெரும்பாலும் குறிப்பதாயது கவனிக்கற்பாலது.

இச்சாந்திக் கூத்தாடுவார்க்கு "கண்ணுளர்" என்று ஒரு பெயரிருந்ததாக, சிலப்பதிகாரம் இந்திரவிழஆரெடுத்த கதையால் தெரியவருகிறது. கண்ணுள் என்பதற்கு கூத்து என்று திவகரத்தில் அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது. அன்றியும் அடியார்க்கு நல்லார்

"வாசிகை வைத்து, மணித் தோடணியணிந்து,
மூசிய சுண்ணம் முகத்தெழுதி;-தேசுடரே
யேந்து சுடர்வாள் பிடித்திட், டீசனுக்கும் காளிக்கும்
சாந்திக் கூத்தாடத் தகும்'

என்கிற வெண்பா ஒன்றை, மேற்கோளாகக் கூறியுள்ளார். இவ்வெண்பாவினால் சாந்திக்கூத்தானது முற்காலத்தில் எவ்வாறு ஆடப்பட்டதென ஒருவாறு அறிகிறோம் ; இக்கூத்தாடுவோர் கையில் வாள்பிடித்தாடுவர் என்பதையும், "மூசிய சுண்ணம் முகத்தெழுதி" என்பதனால், அக்காலத்திலும் நாடகமாடுவோர் முகத்தில் வர்ணம் பூசிக்கொள்கிற வழக்கமுண்டென்பதையும் கவனிக்க. மேலும் ஈசனுக்கும் காளிக்கும் சாந்திக் கூத்தாடத் தகு”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/8&oldid=1285049" இலிருந்து மீள்விக்கப்பட்டது