பக்கம்:நாடகத் தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ராவ், குப்பண்ண ராவ் என்று இருவர் இருந்தனர்; சுந்தரராவினுடைய சங்கீதம் மதுரமாயிருக்கும். குப்பண்ணராவுக்குப் பாடத் தெரியாது. ஆயினும் ஸ்திரீ வேடம்பூண்டு நடிப்பதில் வெகுசமர்த்தர் அகஸ்ய பாகத்திற்காக பஞ்சநாத ராவ் என்றொருவன் இருந்தான் இவனை பஞ்சண்ணா, என்று செல்லப்பெயரால் அழைப்பார்கள். இவன் சமயோசிதமாக ஆஸ்யம் செய்வதில் வெகு சமர்த்தன். கோனேரி ராவ் என்பவன் முக்கிய ராஜவேஷம் தரிப்பவன். இதற்கு அயன் ராஜபார்ட் என்று பெயர். இவர்கள் காலத்தில் நாடகமாடும் விதம் கவனிக்கத்தக்கது. ஒரு நாடகம் ஆடுவதென்று தீர்மானித்தவுடன், அன்றைத்தினமோ அல்லது முந்தியதினமோ, கோவிந்த சாமி ராவ் இன்னின்னர் இன்னின்ன வேடம் தரிக்கவேண்டுமென்று தீர்மானித்துவிடுவார். அதன்பேரில் அந்தந்த நாடக பாத்திரங்களுக்குத் தக்க பாட்டுகளை பழைய கீர்த்தனங்களிலிருந்தாவது, அல்லது புதிதாய்க் கற்பித்துக்கொண்டாவது, பாட்டுக்களெல்லாம் ஒத்திகைப் பார்ப்பார்கள், (ஒத்திகை என்பது ஆங்கிலேய பாஷையில் rehearsal என்பதாம். ஒத்திருக்கை என்னும் பதத்தின் மருவாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. சரிபார்க்கை என்று அர்த்த முடையதாம்.) அவ்வளவுதான் பேசவேண்டிய வசனங்கள் கதைக்கிசைந்தபடி அந்தந்த வேஷதாரி பேசவேண்டும் புஸ்தகம் ஒன்றில் எழுதி அதை மனனம் செய்து நடிக்கும் தொல்லையேயில்லை! நாடக பாத்திரங்களெல்லாம் தஞ்சாவூரிலிருந்த தமிழ் உணர்ந்தவர்களாதலால், சாதாரணமாகத் தமிழ் நன்றாய்ப் பேசுவார்கள். இவர்கள் பேசுவது மற்ற நாடகக் கம்பெனியாரைப்போல் கொச்சையாயிராது. இலக்கணமுடையதாகவே யிருக்கும். கோவிந்தசாமி ராவ் என்பவர் தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி, மகாராஷ்டிரம், முதலிய பாஷைகளில் தாராளமாய்ப் பேசுவார், இக்கூட்டத்தார் ஆடிய 'ஸ்திரி சாஹசம்' எனும் நாடகமே நான் முதல்முதல் பார்த்த தமிழ் நாடகம் காலஞ்சென்ற என் தந்தையாராகிய விஜயரங்கமுதலியார், என்னை இந்நாடகத்தைப் பார்க்க, என் வேண்டுகோளின்படி தன்னுடன் அழைத்துச் சென்றார், நாடகம் நடந்ததை மிகவும் கவனமாய் உற்றுக் கேட்டிருந்து, மறுநாள் அக்கதையை 'புஷ்பவல்லி’ என்கிற பெயரிட்டு ஒரு நாடகமாக எழுதினேன். இதுதான் நான் முதல் முதல் தமிழில் எழுதிய நாடகம். அந்த வயதில் எனக்கு ஞாபகசக்தி நன்றாயிருந்தமையால் அன்று நடித்த வேஷதாரிகள் பேசிய வார்த்தைகளில் சில பாகம் அப்படியே பெயர்த்தெழுதியிருக்ககக்கூடும் என்று நினைக்கிறேன். இந்த கோவிந்தசாமி ராவுடைய நாடகக் கம்பெனியில் நாடக ஆரம்பம் சமஸ்கிருத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/82&oldid=1296436" இலிருந்து மீள்விக்கப்பட்டது