பக்கம்:நாடகத் தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சொல்ல வேண்டியிருந்தால் அவன் கூத்தாடியாயிருக்கிறான்" என்று சொல்லத்தக்க ஸ்திதிக்கு வந்துவிட்டது. அக்காலம் ஏகதேசமாய் நடத்தப்பட்ட தமிழ் நாடகங்கள், குலஸ்திரீகள் பார்க்கத்தக்க வகையாய் நடத்தப்படவில்லை என்று உறுதியாய்க் கூறலாம். அன்றி மற்றொரு முக்யமான காரணம், கற்றறிந்தவர்கள் நடத்தத்தக்க நாடகங்கள் இல்லாமையே. மேற்குறித்த குறைகளையெல்லாம் போக்க ஆதிகாரணமாயிருந்தது காலஞ்சென்ற பல்லாரி கிருஷ்ண மாசசர்லு என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட சரசவினோத சபை எனும் தெலுங்கு நாடகசபையே என்று கூறலாம். இச்சபையானது, இதைப்போன்ற தமிழ் நாடக சபைகள், சென்னையிலும், நமது தமிழ் நாட்டிலும் ஸ்தாபிக்கப்படக் காரணமாயிருந்தபடியால் இதைப் பற்றி சில விவரங்கள் இங்கு கூறுவது அவசியமாகிறது. காலஞ் சென்ற கிருஷ்ணமாசார்லு என்பவர் பல்லாரியில் வக்கீல் வேலையைப் பார்த்திருந்தார்; ஆங்கிலம், தெலுங்கு பாஷைகளில் விற்பன்னர்; மேற்சொன்ன சரசவினோதினி சபையை ஸ்தாபித்து அதற்காக, அநேகம் தெலுங்கு நாடகங்களை இயற்றி தெலுங்கு பாஷாபி மானிகளால் 'ஆந்திர நாடக பிதா மகன்' என்கிற பெயரைப் பெற்றவர்; அதுவரையில் தெலுங்கில் தமிழ் தெருக்கூத்துகளுக்கொப்பாக, 'சென்சு நாடகமு' என்பதுதான் இருந்தது. இக்குறையைத் தீர்க்கவேண்டி ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும் இருந்த சிறந்த நாடகங்களுக்கொப்பாக, தெலுங்கு நாடகங்களை இவர்தான் எழுதத்தொடங்கி, சாவித்திரி, விஷாத சாரங்கதரன், சித்ர நளீயம், பாதுகா பட்டாபிஷேகம், சிரகாரி, பிரமேளா, பிரஹந்நளr, பாஞ்சாலி சுயம்வரம், முக்தாவளி முதலிய நாடகங்களே இயற்றினர். இந்நாடகங்களையெல்லாம் இவர் ஏற்படுத்திய சரசவினோத சபையாரைக்கொண்டு ஆடுவித்தனர். தானும் வேஷம் தரித்து அரங்கத்தில் வந்து ஆடினர். இச்சபையைச் சார்ந்தவர்களெல்லாம் கற்றறிந்தவர்கள்; வேறு உத்யோகமுடையவர்கள்: பாஷையிலுள்ள அபிமானத்தின்பொருட்டும், நாடகச்சாலையில் அவர்களுக்கிருந்த அபிருசியின் பொருட்டுமே அவர்கள் மேற்கண்ட நாடகங்களை ஆடி வந்தனர். மேற்கண்ட சபையார் 1891இல் ஜூன் மாதம் முதல் முதல் சென்னைக்குவந்து விக்டோரியா பப்ளிக்ஹால் என்னும் இடத்தில் தெலுங்கு நான்கைந்து நாடகங்கள் நடத்தினார்கள். சென்னையிலும் அனேகம் கனவான்கள் இவற்றைக்கண்டு மகிழ்ந்தனர். இதனால் இதுவரையில் நாடகத்துக்கிருந்த இழிவும், நாடகமாடுந் தொழிலுக்கு இருந்த தாழ்மையும், ஒருவிதத்தில் நீங்கியதெனவே கூறலாம். மேற்கண்ட சபையார் சென்னைக்கு வந்து நாடகங்கள் நடந்தியதின் முக்கிய பலன் யென்னவெனின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/86&oldid=1296542" இலிருந்து மீள்விக்கப்பட்டது