பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வர் இதற்குச்சில வருஷங்களுக்குப் பின்கவர்ன்மென்ட் உத்தியோகத்தில் அமர்ந்து, கடந்த ஐரோப்பிய யுத்தத்தில் பிரான்சு முதலிய தேசங்களுக்குப் போயிருந்து தற்காலம் பென்ஷன் வாங்கிக்கொண்டு, தெய்வகடாட்சத்தினால் சுகஜீவியாயிருக்கிறார்.

மேற்சொன்ன ராஜகணபதி முதலியாருடைய தோழனான ஜே.பி.ஷண்முகம் பிள்ளை என்பவர், அன்று விகடனாக நடித்தார். இவர்கள் இருவரும் கிறிஸ்துவக் கலாசாலையில் ஒன்றாய்ப் படித்துக் கொண்டிருந்தவர்கள். ஷண்முகம் பிள்ளை என்னைப் போல் கொஞ்சம் குறும்பு குணமுடையவர்; எந்நேரமும் ராஜகணபதி முதலியாரை ஏளனம் செய்து கொண்டிருப்பது அவருடைய வழக்கம். ராஜகணபதி முதலியாருக்குக் கொஞ்சம் கருடப்பார்வை; அதைப்பற்றி அவர் ஏளனமாகச் செய்த இரண்டு பாட்டுகளை இங்கு எழுதுகிறேன்:

“குண்டனாம் கணபதி Crooked faced creature, அண்டங்கள்திர அடிவைப்பவனாம் - முண்டம், எதிலும் பயனில்லை எண்ணிப் பார்த்தால், ஒதியிலும் Worthless tree"; “மூடனாம் கணபதி, மூன்றில் பாதி கண்ணனாம் - நாட என்றால் நம்மாலு மாகாதே-கூட-படி அரிசி தன்னைப் பரிவுடன் சமைத்து வைத்தால், நொடியில் நுகர்ந்து விட்டு Not sufficient என்பானே.”