பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முதல் வருஷம் தசராக் கொண்டாட்டத்தில் தினம் பூஜை ஆனவுடன், பிரசாதம் சாப்பிடுமுன், ஆக்டர்களில் பாடத் தெரிந்தவர்களெல்லாம் கொஞ்சம் பாட ஆரம்பித்தோம். இரண்டாவது வருஷம் கொட்டகை போட்டபின், அங்கு ஏதாவது நாடகக் காட்சிகள் நடத்தலாமேயென்று, இரண்டொரு நாள் எங்கள் நாடகங்களிருந்து சில காட்சிகளை ஆடினோம். பிறகு விக்டோரியா ஹால் மேல் மாடியை வாடகைக்கு எடுத்துக் கொண்டபின், ஒன்பது அல்லது பத்துத் தினங்களும் நாடகங்கள் ஆட ஆரம்பித்தோம். முதலில் தினச் செலவு அதிகமானால் 5 ரூபாயாயிருந்தது. பிறகு குறைந்தபட்சம் 50 ரூபாய் ஆகிவிட்டது! இவ்வாறு செலவு அதிகமாகவே, ஒருவாராக இதை மேற்கொள்வது கடினமென்று, அங்கத்தினரைக் கூட்டங்களாகப் பகிர்ந்து கொடுத்தோம். இவ்வாறு தற்காலம் வக்கீல்கள் தினமென்றும், ஆரிய மஹா வைசியர்கள் தினமென்றும், பேரி செட்டிகள் தினம் என்றும், வர்த்தகர்கள் தினமென்றும், மைலாப்பூர் அங்கத்தினர்கள் தினமென்றும் பலவிதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இத்தகைய கூட்டத்தாருள் இடைவிடாது நாளது வரையில் நடத்தி வந்தவர்கள் ஆரிய மகா வைசியர்களே. இக் கொண்டாட்டத்தின் இரண்டாம் வருஷம் முதல், ஸ்திரீகளுக்குப் பிரத்யேகமாக ஒரு தினம் ஏற்படுத்தினோம். அன்று சி.பி. ராமஸ்வாமி ஐயர் செலவை