பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

நாடக மேடை நினைவுகள்


படித்து விட்டுத்தான் வருவேன். அச் சமயங்களிலெல்லாம், யாராவது என்னைப் பார்க்கவேண்டுமென்று கீழே விசாரிப்பார் களானால், “உபாத்தியாயர் பாடம் படிக்கப் போயிருக்கிறார்! அவரை இப்பொழுது ஒருவரும் தொந்தரவு செய்யக் கூடாது” என்று எனது நண்பர்கள் ஏளனமாகச் சொல்வார்கள். நான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்துஸ்தானி பாஷைகளில் சில பாத்திரங்களை ஆடியிருக்கிறேன் என்பது என் நண்பர்கள் அறிந்த விஷயமே. அவைகளில் பெரும்பாலும் என் பாகம் மிகவும் சிறு பாகங்களாகவேயிருக்கும்; எவ்வளவு சிறிய பாகமாயிருந்தாலும் மேற்சொன்னபடி அதை ஒரு முறை ஏதோ காரணத்தினாலும் மறதியினாலும் அவ்வாறு செய்யாமற்போய் நான் நாடகமேடையில் தட்டுத் தடுமாறியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது; இது திருநெல்வேலியில் நடந்ததென நினைக்கிறேன்; அப்பொழுது நாடக மேடையின் பேரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, என்ன நமது பாகம் தடுமாறுகிறது என்று யோசித்துப் பார்க்க, இன்று நாம் இதை வழக்கம்போல் படிக்கவில்லையல்லவா என்று ஞாபகம் வந்தது! இதை நான் இவ்வளவு விவரித்து எழுதியதற்குக் காரணம், இதனால் பெரும் அனுகூலமுண்டென்றும், இப்படிச் செய்யாவிட்டால் கஷ்டப்பட வேண்டு மென்பதையும் நாடக மேடையில் பெயர்பெற விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் பொருட்டே. தற்காலம் எங்கள் சபை உட்படச் சில சபைகளில் சில ஆக்டர்களைப் பார்த்திருக்கிறேன்; அவர்கள் தங்கள் பாடங்களை நன்றாய்ப் படிக்காமல் மேடையேறி விடுகிறார்கள்; சரியாகப் படிக்காததை மறைப்பதற்காக, ஒவ்வொரு சைட்படுதா பக்கத்திலும் ஒவ்வொரு ப்ராம்டர் (நாடகப் புஸ்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மேடையின் மீதிருக்கும் நடிகன் ஏதாவது மறந்து போனால், அதை எடுத்து அவனுக்குச் சொல்ல வேண்டியவன்) ஏற்பாடு செய்து கொள்ளுகிறார்கள். இதென்ன இரண்டு பிராம்டர்கள்? என்று விசாரிக்குமளவில் இந்தப் பக்கம் நின்று பேசும்பொழுது இந்த பிராம்டர் அந்தப் பக்கம் நின்று பேசும் பொழுது அந்த பிராம்டர்! என்று பதில் உரைத்திருக்கிறார்கள். தங்கள் பாடங்களைச் சரியாகப் படியாததனால் அடிக்கடி பிராம்டர்களிருக்கும் பக்கம் இந்த ஆக்டர்கள் திரும்ப