பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நாடக மேடை நினைவுகள்


உனது இளிப்பையாவது ஏளனம் செய்ய ஒன்றையாவது கூறமாட்டாயா? உன் முகவாய்க்கட்டை அடியுடன் அற்றுப் போயதா!” இவர் தன் தேகஸ்திதியை ஜாக்கிரதையாகக் கவனிக்காதபடியால் அக்கதிக்கு வந்தார் போலும்!

மேற்சொன்ன நான்கைந்து நாடகப் பாத்திரங்களில் அன்றைத் தினம் நாடகத்தில், என் மனத்தைக் கவர்ந்தவன் இன்னும் ஒருவனே. அவன் வாலிபனான மந்திரிகுமாரன் வேஷம் தரித்தான். அவன் வயது சற்றேறக்குறைய என் வயதுதான் இருக்கும். அன்றியும் அன்றிரவு நாடகத்தில் இவன் பாடவேயில்லை! இவ்விரண்டும்தான் இவன் மீது என் மனத்தை உந்தியதோ என்னவோ? இவன் வசனமானது மிகவும் சுத்தமாக இருந்தது. அன்றிரவு நாடகம் முடிவதற்குள் இந்தக் கதையையே நான் நாடகமாக எழுதி, இவன் பூண்ட மந்திரிகுமாரன் வேஷமே நான் பூணவேண்டுமென்று தீர்மானித்தேன்.

இந்நாடகத்தில் நான் கண்ட ஓர் ஆபாசம் மாத்திரம் என் மனத்தை வருத்தியது; ராஜகுமாரனுடைய முதன் மனைவி, தன் சோர நாயகனாக ஒரு குஷ்டரோகியிடம் சென்றதாக ஒரு காட்சி நடிக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வெறுப்பைத் தந்தது. என்னதான் கெட்டவாளயிருந்த போதிலும் ஓர் அழகிய ராஜகுமாரி குஷ்டரோகியிடம் அணுகமாட்டாள் என்று தீர்மானித்தவனாய், நான் எழுதும்பொழுது இதை மாற்றிவிட வேண்டுமென்று தீர்மானித்தேன். எனக்கு அருவருப்பைத் தந்த போதிலும் அங்கு நாடகம் பார்க்க வந்த ஜனங்கள் இக்காட்சியைக் கண்டு சந்தோஷப்பட்டனர் என்றே நான் உரைக்க வேண்டும். இவ்விஷயத்தைப் பற்றி அன்றிரவு என் தந்தையுடன் நான் கலந்து பேசியபொழுது, நான் எண்ணியது தான் சரியென்று அவரும் ஆமோதித்தார். அன்றிரவு நாடகம் முடிந்து நாங்கள் வீட்டிற்குப் போவதற்கு சுமார் இரண்டரை மணியாச்சுது!

மறுநாள் நான் எழுந்திருந்து என் காலைக்கடன்களை முடித்தவுடன், முந்திய தினம் இரவு நான் பார்த்த கதையை நாடகமாக எழுத உட்கார்ந்தேன். கதா நாயகிக்கு, புஷ்பவல்லி என்கிற பெயரை இட்டு, நாடகத்திற்கும் அப்பெயரையே வைத்தேன். கோவிந்தசர்மி ராவ் நடத்திய நாடகத்தில் எந்தப்