பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயம்புத்தூரில் நாங்கள் நாடகங்களாடிய சாலை, மிஸ்டர் வின்சென்ட் என்பவரால் கட்டப்பட்டது. இதை விடப் பெரிய நாடக சாலைகளைப் பார்த்திருக்கிறேன்; இதைவிட அழகிய நாடக சாலைகளைப் பார்த்திருக்கிறேன்; ஆயினும் இதைப்போன்ற ஆக்டர்களுக்குச் சௌகர்யமான நாடக சாலையை நான் பார்த்ததில்லை. அரங்கத்திலிருந்து மெல்லப் பேசினாலும், ஹால் முழுவதும் ஸ்பஷ்டமாய்க் கேட்கும்படி கட்டப்பட்டது; அரங்கத்தின் பின்பாகம் வேஷம் தரிப்பதற்காக இரண்டு மூன்று பெரிய விசாலமான அறைகள் இருந்தன; அன்றியும் மற்ற நாடகசாலைகளிலில்லாத இவ்விடமிருந்த புதுமையென்னவெனில், மற்ற நாடக சாலைகளில் ஆக்டர்கள் நாடகம் ஆரம்பித்த பிறகு, ஏதாவது பாட்டுகளின் சுருதிகளை மாற்ற வேண்டியிருந்த போதிலும், அல்லது ஏதாவது பாட்டை விடவேண்டியிருந்த போதிலும், பக்க வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டியிருந்தால், மேடைக்கு வெளியே ஓர் ஆள் அனுப்பி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இங்கு அக்கஷ்மில்லாது, நேபத்யத்திலிருந்து அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அரங்கத்தின்கீழ் சுரங்கம் மாதிரி ஒரு வழியாக ஹாலில் உட்கார்ந்திருப்பவர்கள் ஒருவருமறியாத படி, சென்று அவர்ளுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் இன்னொரு பிரயோஜனமும் உண்டு. மற்ற நாடகசாலைகளிலெல்லாம், வேடம் தரித்த ஒரு ஆக்டர், தனக்கு வேலையில்லாத ஒரு