பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

47


குறைந்தனவன்று. சில ஒத்திகைகள் ஆறு அல்லது ஏழு மணி பிடிக்கும். அவைகள் முக்கியமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தியவையாம். நல்ல வெயிற் காலத்தில் சித்திரை வைகாசி மாதங்களில் சுமார் ஒரு மணிக்கு என் வீட்டிலிருந்து என் தகரப்பெட்டி ஒன்றில் நாடகக் காகிதங்களை எடுத்துக் கொண்டு, சபை ஸ்தாபித்திருந்த தம்பு செட்டித் தெரு வீட்டிற்குப் போவேன். மற்ற நடிகர்கள் எல்லாம் சீக்கிரம் வந்து சேர்வார்கள். உடனே ஒத்திகை ஆரம்பிப்போம். ஞாயிற்றுக்கிழமை ஒத்திகைகளுக்கெல்லாம் சற்றேறக்குறைய ஒன்றும் தவறாமல், ம-ள-ள-ஸ்ரீ. வி. திருமலைப் பிள்ளையாகிய எங்கள் கண்டக்டர் வந்து சேர்வார். அவரைப்பற்றி இச்சந்தர்ப்பத்தில் சில விஷயங் களைக் கூற விரும்புகிறேன்.

அவர் ம-ள-ள-ஸ்ரீ, பசவப் பிள்ளையின் குமாரர். அப்பொழுதுதான் லாயர் பரீட்சையில் தேறி, லாயர் ஆனவர். ஆஜானுபாகுவாய், பெரிய காத்திரமுடையவர். அதற்கேற்ற படி உயரமுமுடையவர். இவர் ஜெயராம் நாயகருடைய மைத்துனர். இவர் நாடகங்களில் அக்காலத்தில் மிகவும் ஊக்கமுடையவராயிருந்தார். இவரை எங்கள் தலைவராகக் கொண்டு இவருக்கு என்ன பெயர் கொடுப்பது என்று நாங்கள் யோசித்த பொழுது அக்காலத்தில் மற்ற நாடகக் கம்பெனிகளில் வழங்கிய ‘ஸ்டேஜ் மானேஜர்’ என்னும் பெயர் எங்களுக்கு இஷ்டமில்லாதபடியால் கண்டக்டர் என்கிற பெயர் வைத்தோம். சாதாரணமாக ஆங்கிலேய பாஷையில் கண்டக்டர் என்கிற பதம், நாடக சந்தர்ப்பத்தில், பக்கவாத்தியக்காரர்களை சரியாக வாசிக்கச் செய்யும் தலைமை பெற்றவர்க்கே உபயோகப்படுவது. ஆயினும் பெரிதல்லவென்று அப்பெயரையே திருமலைப் பிள்ளை அவர்களுக்கு நிர்வாக சபையார் கொடுத்தார்கள். இவர் மற்ற நடர்கள் வருவது போல் சுமார் இரண்டு மணிக்கெல்லாம் வந்து விடுவார். இவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, நான் நாடக புஸ்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, ஒத்திகை ஆரம்பிப்பேன். நாடகப் பாத்திரர்களும் பாத்திரமில்லாத அங்கத்தினரும் அறையில் சுற்றிலும் உட்காருவார்கள். அறையின் மத்தியில் நாங்கள் ஒத்திகை நடத்துவோம். ஒரு காட்சி ஒத்திகையானவுடன், திருமலைப் பிள்ளை அவர்கள், இன்னின்னார் பாடம் சரியாகப் படிக்கவில்லை, நடித்ததில்