பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

49


இப்பொழுது அதில் நூற்றில் ஒரு பங்கில்லை. இதற்குக் காரணம் எனக்கு வயதானது மாத்திரமாய் இருக்கக் கூடுமா? அப்படித்தான் என்று யாராவது எனது நன்பர்கள் எனக்கு ரூபித்தால் மிகவும் சங்தோஷமுள்ளவனாயிருப்பேன். வயதானபடியால் என் தேக சக்தி குன்றிய போதிலும், என் உற்சாகமானது, என்னையே நான் பட்சபாதமின்றி ஆராயுமிடத்து, கொஞ்மேனும் குன்றவில்லையென்றே நான் கூற வேண்டும். ஆகவே வேறு காரணங்களிருக்க வேண்டுமென்று எனக்குத் தோற்றுகிறது. இனி சுந்தரி நாடகத்திற்குப் பகிரங்க ஒத்திகை நடத்திய கதையை எனது நண்பர்களுக்குக் கூறுகிறேன்.

ஆறாம் அத்தியாயம்

த்திகைகள் எல்லாம் சரியாக நடந்தேறியது என்று நிர்வாக சபையார் தீர்மானித்த பிறகு, பகிரங்கமான ஒத்திகை நடத்த வேண்டுமென்று தீர்மானித்தோம். முன்பு புஷ்பவல்லி நாடகத்திற்கு பகிரங்க ஒத்திகை நடத்திய இடம் போதாதென்று எனது நண்பர்கள் கூறவே, என் தந்தையிடம் இச் சமாச்சாரத்தைக் கூறி, சுமார் 200 பெயர் இருக்கக் கூடிய இடம் ஒன்று வேண்டுமென்று கேட்டேன். அதற்கு அவர் இசைந்து, நாங்கள் அப்பொழுது குடியிருந்த ஆச்சாரப்பன் வீதி 54ஆம் நம்பருடைய வீட்டிற்குப் பக்கத்து வீடாகிய 53 கதவிலக்க முள்ள வீட்டை, என்னை அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்து அங்கு மாடியிலுள்ள ஹால் போதுமா என்று கேட்க, அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அந்த வீடு எனது நெருங்கிய பந்துவாகிய திருமணம் அண்ணாமலை முதலியாருடையது. அவர் என் தந்தையின் வேண்டுகோளுக் கிசைந்து, நாங்கள் அங்கு பகிரங்க ஒத்திகை நடத்த ஏற்றுக் கொண்டார். என் தகப்பனார் இந்த ஒத்திகையைத் தான் கட்டாயமாய்க் காண வேண்டுமென்று வற்புறுத்தினார். முன்பு புஷ்பவல்லி ஒத்திகை நடத்திய பொழுது அவர் வரலாகாதென்று நான் மறுத்திருந்தேன். அதற்குக் காரணம் அவர் வந்தால் நானும் எனது சிறு வயதுடைய நண்பர்களும்