பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



638

நாடக மேடை நினைவுகள்


வேண்டும்? இனியாவது கண்டக்டர்கள், ஆக்டர் விரும்புகிறார்களே என்று இதை உபயோகியாமல், சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி இந்த லைம் லைட்டை உபயோகிப் பார்களாக.

இதற்கு ஓர் உதாரணமாக இந்தப் “புத்தாவதாரம்” என்னும் நாடகத்தில் ஒரு முக்கியமான காட்சியையே எடுத்துக்கொள்கிறேன். இதில் ஒரு மிகவும் முக்கியமான காட்சி. கௌதம புத்தர் போதி விருட்சத்தின் அடியில் மெய்ஞ் ஞானத்தை அடையும் காட்சியாம்; இக்காட்சியின் ஆரம்பத்தில் களைத்த கௌதமர், சாயங்காலத்தில் சுஜாதையின் கரத்தினின்றும் உணவை உட்கொள்ளுகிறார். அச்சமயம் சாயங்கால வெயிலிருப்பதுபோல், மேடையில் வெளிச் சத்தைக் குறைத்துக் காட்ட வேண்டும். பிறகு புத்தர் போதி விருட்சத்தின் அடியிற் போய் தீர்மானத்துடன் உட்கார்ந்ததும், சந்திரன் எழுவதுபோல சந்திர வெளிச்சத்தைக் காட்ட வேண்டும். அதன் பிறகு மாரன் மங்கையர் அவரை மயக்க முயலும்போதும் நர்த்தனம் செய்யும் போதும் சந்திர ஒளியை அதிகப்படுத்திக் காட்டவேண்டும். பிறகு அவர்கள் ஜம்பம் சாயாமற் போனபின், சந்திரன் மேகங்களால் மறைவுறுவதுபோல், வெளிச்சத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைத்துக்கொண்டே போக வேண்டும். பிறகு குரோதம், மாச்சரியம், லோபம், அகங்காரம், அவித்யை, அவா முதலியன கோர ரூபங்களுடன் அவரை அதட்ட வரும்போது, ஏறக்குறைய இருண்டிருக்க வேண்டும். கடைசியாக அவைகள் மறைந்தவுடன் சில விநாடி வரைக்கும் நாடக மேடை முற்றிலும் இருள் சூழ்ந்தே இருக்க வேண்டும். திடீரென்று கௌதமருக்கு ஞானம் உதித்தது போல் அவர் நெற்றியின் மத்தியில் ஒரு வெளிச்சம் தோன்றவேண்டும். பிறகு அந்த ஞானம் பரவியது போல் முதலில் முகத்திலும் பிறகு உடல் முழுவதிலும் ஜோதி தோன்ற வேண்டும். இந்த ஒரு காட்சிக்கு வெளிச்சத்திற்கு இவ்வளவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. மற்றவைகளையெல்லாம் சுலபமாக ஏற்பாடு செய்து பார்த்தோம், எங்கள் கடைசி ஒத்திகைகளில்; ஆயினும், கௌதமருடைய நெற்றியில் பிரகாசம் தோன்றும்படி செய்வது எங்ஙனம் என்று ஏக்கமுற்ற பொழுது, இதி