பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



672

நாடக மேடை நினைவுகள்


இவ்வருஷம் நான் புதிதாய் எழுதி முடித்த “சுபத்தி ரார்ஜுனா” என்னும் நாடகமானது எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. எனது அத்யந்த நண்பர், நான் முன்பே குறித்தபடி மதுரைக்கு மாற்றப்பட்டபடியால், அவரும் நானும் இதில் வேடம் தரிக்க ஏலாமற் போய்விட்டது. இந் நாடகத்தை சென்னையில் எனது மற்ற நண்பர்கள் ஆடினபொழுது, நான் மதுரைக்கு சைத்ரோற்சவம் பார்க்கப் போயிருந்தேன்.

நான் இப் பிரயாணத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வருங்கால் ஸ்ரீரங்கத்தில் எனக்கு நேரிட்ட, எனது நாடக மேடை சம்பந்தமான நினைவொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. மதுரை உற்சவத்திற்கு என் குமாரத்திகள் இருவர்களையும் அழைத்துச் சென்றேன். பட்டணம் திரும்பி வரும் பொழுது அவர்கள் தாங்கள் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதனைத் தரிசிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். அதற்கிசைந்து, வரும் மார்க்கத்தில் திருச்சிராப்பள்ளியில் ஒரு நாள் தங்கி, அவர்களை அன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். கோயிலுக்குப் போய் கர்ப்பக் கிரஹத்தைத் அண்டினபொழுது, அன்று உற்சவம் ஆரம்பமாய் விட்டது. உற்சவ விக்கிரஹம் வெளியில் புறப்பட்டிருக்கும்பொழுது, மூல விக்ரஹத்திற்கு ஆராதனம் கிடையாது என்று மூலஸ்தான கோயில் தாளிடப்பட்டிருந்தது! “ஐயோ! இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும், ஸ்ரீரங்கநாதர் தெரிசனம் நமக்குக் கிடைக்கவில்லையே” என்று எனது இரண்டு குமாரத்திகளும் துக்கப்பட்டனர். நான் ரங்கநாதரை இதற்குமுன் பலதரம் தரிசித்திருந்தபோதிலும், அவர்களுக்கு அப் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வாடின முகமுடையவனாய், அவர்களை அழைத்துக்கொண்டு திரும்பி, முதல் கோபுரம் வரையில் வந்தேன். நாங்கள் கர்ப்பக்கிரஹத்தருகில் போனதையும், ஸ்வாமி தரிசனம் கிடைக்காமல் திரும் பினதையும் கவனித்த யாரோ ஒரு பிராமணர் (அவரது பெயரையும் பிறகுதான் அறிந்தேன்), எங்களைப் பின்தொடர்ந்து வந்து, என்னைப் பார்த்து “தாங்கள்தானா, சம்பந்த முதலியார்?” என்று கேட்டார். நாம் ஆம் என்று ஒப்புக் கொண்டு, ஏன் கேட்கிறீர்கள் என்று வினவ, “கொஞ்சம் பொறுங்கள், நீங்கள் இவ்வளவு தூரம் வந்து