பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

நாடக மேடை நினைவுகள்


வேஷம் தரிப்பதில் முக்கியமாகப் பெயர் பெற்றது இவரது நடையுடை பாவனைகளின் சிறப்பைக் கொண்டே. கறுப்பு நிறமுடையவராயிருந்த போதிலும் முகத்தில் மிகவும் அங்கலட்சண முடையவராயிருந்தார். ஸ்திரீகள் எப்படிப் பார்க்கின்றனர், எப்படி நடக்கின்றனர், எப்படிப் பேசுகின்றனர், எப்படி உடுக்கின்றனர் என்பதை யெல்லாம் மிகவும் நன்றாய்க் கவனித்து, அப்படியே அரங்கத்தில் நடிக்கும் வல்லமை வாய்ந்தவர். இதனால்தான் இவருக்கு அப்போது முக்கிய ஸ்திரீ வேஷம் கொடுக்கப்பட்டது. எங்கள் சபையில் 1895ஆம் வருஷத்திற்கு மேல்தான் இவர் ஆண் வேஷம் தரிக்க ஆரம்பித்தார். தற்காலம் என்னைப் போல் வயதாகி, உடம்பு கொஞ்சம் பெருத்திருந்த போதிலும், இன்னும் ஸ்திரீவேடம் தரிப்பவர்களுக்கு நடைபாவனைகளில் ஏதாவது சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால், ஊக்கத்துடன் சொல்லிக் கொடுப்பார். சுகுணவிலாச சபையின் முதல் அங்கத்தினராகிய இவர், இன்னும் ஜீவந்தராயிருப்பது சபை செய்த புண்ணியமென்றே கருதுகின்றேன்.

அக்காலத்தில் இரண்டாவது ஸ்திரீ வேஷம் தரித்தவர், அ.சுப்பிரமணிய அய்யர் என்பவர். சில விஷயங்களில் ஜெயராம் நாயகருக்கு நேர் விரோதமான குணங்களையுடையவர் இவர். அவர் கருப்பாயிருந்தார்; இவர் மிகவும் சிவப்பாயிருப்பார். அவருக்கு சங்கீதத்தில் அதிகப் பயிற்சி இல்லை ; இவர் இனிய குரலுடன் நன்றாய்ப் பாடுவார். அவர் நடிப்பதில் மிகவும் நிபுணர்; இவர் இவ்விஷயத்தில் நாம் எவ்வளவு சொல்லிக் கொடுக்கிறோமோ அவ்வளவுதான் மேடையில் நடிப்பார். மிகுந்த அடக்கமான சுபாவமுடையவர். பேசுவதும் மெல்லிய குரலுடன் பேசுவார். இவர் புஷ்பவல்லி என்னும் நாடகத்தில் முதலில் புஷ்பவல்லியின் தோழியாகவும், பிறகு மந்திரி குமாரனான புத்திசேனன் மனைவியாகிய பானுமதியாகவும் வேடம் பூண்டனர். ‘சுந்தரி’ என்னும் நாடகத்தில் சத்யவந்தன் மனைவியாகிய சாகரிகை வேடம் பூண்டனர். எனது மூன்றாவது நாடகமாகிய லீலாவதிசுலோசனாவில் இவர்தான் முதல் முதல் சுலோசனையாக நடித்தவர். இவருக்கென்றே இந்த நாடகப் பாத்திரத்தை நான் எழுதினேன் என்று ஒரு விதத்தில் கூற வேண்டும். இவர் இரண்டு முறை அரங்கத்தில் என் மனைவியின் வேடம்