பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

61


கையில் காசில்லை; என்ன செய்வது என்று யோசித்து ஒரு யுக்தி செய்தோம். அச்சமயம் ராமநாதபுரம் சேதுபதி அவர்கள் சென்னைக்கு வந்திருந்தார். அவரை சபைக்கு ஒரு பேட்ரன் (Patron) ஆகக்கோரி, அவர் தயாள குணத்தின் மூலமாக ஏதாவது பொருள் சம்பாதிக்கலாம் என்று தீர்மானித்தோம். பாஸ்கர சேதுபதி அவர்களுடைய தகப்பனார், என் தகப்பனாருக்கு நன்றாய்த் தெரியும் என்று அறிந்த நான், இவ்விஷயத்தைப்பற்றி, என் தந்தையிடம் சாப்பாட்டின் பேரில், மெல்லத் தெரிவித்தேன். அவரும் இதற்கிசைந்தார். சேதுபதி அவர்களுக்கு எழுதி ஒருநாள் நாங்கள் அவரைப் பார்ப்பதற்காக குறித்துக் கொடுத்தார். அன்றைத்தினம், சபையின் நிர்வாக சபையாரை அழைத்துக்கொண்டு போய் சேதுபதியவர்களிடம் என் தகப்பனார் விட்டார். அதன் பேரில் சேதுபதி அவர்களுக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரிகையை நான் படித்தேன். அதன் பிறகு கொஞ்சநேரம், அவர் எங்கள் சபையைப்பற்றி விசாரித்தார். அப்பொழுது பேசியதில் எனக்கு ஒன்று தான் நன்றாய் ஞாபகமிருக்கிறது. நீங்கள் எப்பொழுது நாடகங்கள் நடத்தப் போகிறீர்கள். என்று அவர் கேட்டதற்கு, நான் மார்ச்சு மாதம் என்று பதில் உரைக்க அச்சமயம், நானும் ராமநாதபுரம் மார்ச்சாய் (March) விடுவேன் என்று அவர் நகைத்துக்கொண்டே சொன்னார். பிறகு நாங்கள் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். பிறகு சில தினங்கள், பயிரானது மேகத்தை எதிர்பார்ப்பது போல் அவரிடமிருந்து ஏதாவது கிடைக்குமாவென எதிர்பார்த்து வந்தோம். கூடிய சீக்கிரத்திலேயே அச்சீமான் ரூபாய் 300 எங்களுக்குக் கொடையாக அனுப்பினார். பின்வாங்காது கொடுப்பதையே தன் பிருதாகக் கொண்டிருந்த சீமான் எங்களுக்கு அப்பொழுது செய்த உதவி, மிகவும் பாராட்டத் தக்கதாம்; “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறியதன் உண்மையை அன்றே கண்டேன்.

இந்தத் தொகை எங்களுக்குக் கிடைத்தபொழுது நாங்கள் கொண்ட உவகை கொஞ்சம் அல்ல. உடனே இதைக் கொண்டு ஏழு திரைகள் எழுதி வைத்தோம். அக்காலத்தில் “மதிராஸ் டி-ரமாடிக் சொசைடி” என்று சொல்லப்பட்ட ஆங்கிலேயர்களுடைய நாடக சபையில் சீன்கள் எழுதிக்