பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

நாடக மேடை நினைவுகள்


வேண்டுமென்னும் ஊக்கத்தினாலும் சுந்தரி நாடகத்தில் சத்தியவந்தன் பாட வேண்டிய பாட்டுகளிலொன்றை, பக்க வாத்தியம் ஒன்றுமின்றிப் பாடினேன்! இவன் என்ன விடாக் கண்டனாயிருக்கிறான் என்ற எண்ணத்தினாலோ, அல்லது தனது கிராஸ் பரிட்சைக்கெல்லாம் சரியாகப் பதில் உரைத்தேன் என்கிற உவகையினாலோ, பிறகு தானும் சபையை ஆதரிப்பவர்களில் ஒருவராக இருக்க ஒப்புக் கொண்டார்.

பிறகு திவான்பஹதூர் பாக்கம் ராஜரத்தின முதலியார் வீட்டிற்குப் போனோம். அப்பொழுது அவர் எங்கள் குடும்பத்திற்குச் சம்பந்தியாகவில்லை. அவர் ஆரம்ப முதல் இம்மாதிரி யான நாடகச் சபைகளினால் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று கூறி ஆட்சேபிக்க ஆரம்பித்தார். முதலில் சாந்தமாகவே, பெரியவராயிற்றே என்று மிகவும் மரியாதையுடன் எனக்குத் தோன்றிய நியாயங்களை யெல்லாம் எடுத்துக் கூறிப் பார்த்தேன். அதனால் அவர் ஒன்றும் சளையாமற் போகவே, எனக்குக் கோபம் பிறந்து விட்டது. பிறகு ஏட்டிக்குப் போட்டியாய் அவர் கூறுவதற்கெல்லாம் பதில் உரைக்க ஆரம்பித்தேன். என் பக்கத்திலிருந்த முத்துக்குமாரசாமி செட்டியார் மெல்ல சைகை செய்தும், பல தடவைகளில் என் ஆத்திரம் அடங்காது பேச ஆரம்பித்து விட்டேன். கடைசியாக முதலியார் அவர்கள், இம்மாதிரியாக நாடகங்கள் ஆடுவதில் தேசத்திற்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டார். அதற்கு நான் “அதற்குப் பதில் ஷேக்ஸ்பியர் மகாகவியைக் கேட்டுப் பாருங்கள்” என்று பதில் பகர்ந்தேன். அதெல்லாம் சீமைக்கு; நம்முடைய தேசத்தில் அம்மாதிரி யார் இருக்கிறார்கள்? என்று கேட்க, “இப்பொழுதில்லாவிட்டாலும், இனி ஒரு காலம் அப்படிப்பட்ட நாடக ஆசிரியர் நமது தேசத்திலும் பிறப்பார்” என்று பதில் உரைத்தேன். நான் என்ன கூறியும் அவர் மனம் அப்பொழுது மாறவில்லை . ஒரே பிடிவாதமாய் எங்கள் சபையை ஆதரிப்பவர்களுள் ஒருவராக இசைய மாட்டேன் என்று மறுத்து விட்டார். பிறகு நாங்களிருவரும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பிப் போகும் பொழுது செட்டியார், “என்ன அப்பா சம்பந்தம்! பெரியவராகிய அவரிடம் அப்படிப் பேசலாமா?” என்று என்னை மிகவும் கடிந்து கொண்டார். நான் பேசியதில் என்ன தவறு இருந்தது சொல்லுங்கள், என்று நான் அவரைக்