பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

75


கண்டக்டர் என்று பெயர் வைத்துக் கொண்டு, நாடகம் நடிக்குங்கால் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டு, பேசிக் கொண்டிருக்கும் சிலரை நான் பார்த்திருக்கிறேன்; அப்படிப் பட்டவர்களுக்கு, கண்டக்டர்கள் செய்ய வேண்டிய வேலைக்கு உதாரணமாக, திருமலைப்பிள்ளை அவர்களையே கூறுவேன். மேற்கூறியவை அன்றி நாடகம் நடக்கும் பொழுது அப்போதைக்கப்போது ஆக்டர்களை உற்சாகப் படுத்திக் கொண்டே வருவார்.

திருமலைப் பிள்ளை , எல்லாம் சரியாக இருக்கிறதா வென்று பார்த்துவிட்டு மேடைக்குப்போனவுடன், எங்களுக்குப் பாட்டு கற்பித்த வயோதிகரான தாயுமான முதலியார் மெல்லப் படியேறி மெத்தைக்கு வந்து எங்களுக்கெல்லாம் பிள்ளையார் கோயில் விபூதி கொடுத்தார். அதை நாங்களெல்லாம் சந்தோஷமாய் வாங்கி அணிந்துகொண்டு, சரியாக எட்டேமுக்கால் மணிக்கு, அதாவது நாடக ஆரம்பத்திற்குக் குறிக்கப்பட்ட மணிக்கு 15 நிமிஷம் முன்னதாகவே, தாயுமான முதலியார் எங்களுக்கு எழுதிக்கொடுத்த வினாயகர் துதி, சரஸ்வதி துதி பாட்டுகளை எல்லா ஆக்டர்களுமாகப் பாடினோம். பிறகு சரியாக ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பித்தோம்.

சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்து நாடகம் முடிவுபெற 2 மணியாயிற்று. அக்காலத்தில் இரவு இரண்டு மணிக்கெல்லாம் நாடகம் முடிய வேண்டுமென்று போலீஸ் நிர்ப்பந்தம் கிடையாது; அன்றியும் அக்காலத்தில் சாயங்கால் நாடகங் களின் அனுகூலத்தை ஜனங்கள் அறிந்திலர். ஆகவே வந்திருந்த ஜனங்களெல்லாம் 5% மணிசாவகாசம் எழுந்திருந்து போகாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். நாடகத்தைப்பற்றி நிஷ்பட்சபாதமாய்க் கூறுமிடத்து அவ்வளவு நன்றாய் ஜனங்களை ரமிக்கச் செய்யவில்லை என்றே நான் எண்ணுகிறேன். நாடகக் கதாநாயகன் வேஷம் தரித்த ரங்கசாமி ஐயங்கார் பாடல்கள் நன்றாய் இருந்ததெனக் கூறினர்; ஆயினும் அவர் நடித்தது அவ்வளவு உசிதமாயில்லை யென்றே பெரும்பாலும் கூறினார்கள். நாடகக் கதாநாயகி யாகிய ஜெயராம் நாயக்கரைப்பற்றி இதற்கு முற்றிலும் மாறுபாடாக எண்ணப்பட்டது; அதாவது நடித்தது நன்றாயிருந்ததென்றும் பாட்டு நன்றாயில்லை யென்றும்;