பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

நாடக மேடை நினைவுகள்


வேண்டுமென்று கட்டப்பட்டதன்று. சாதாரண ஜனக் கூட்டங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டது. இந்த ஹாலில் பேசினால் கேட்கும்படியான சக்தி குறைந்தபடி யென்று எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். நான் இந்த 40 வருடங்களாகத் தென் இந்தியாவிலுள்ள அநேக நாடக மேடைகளிலிருந்து நடித்திருக்கிறேன். அவைகள் எல்லா வற்றைப் பார்க்கிலும் பேசுவதைக் கேட்கும் திறத்தில், விக்டோரியா பப்ளிக் ஹாலே மிகவும் கீழ்ப்பட்டதென்பது, என்னுடைய சொந்த அனுபோகம். இந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதல் முதல் நாடகமேடை போட்டவர்கள் சென்னை டிரமாடிக் சொசைடியாரே. அவர்களும் ஒன்றிரண்டு வருஷங் கள் பார்த்து இக் குறையை நிவர்த்திக்க முடியாதவர்களாய், இதை விட்டு மியூசியம் (Museum) தியேடருக்குப் போய்விட்டார்கள். சுகுண விலாச சபையாரும் தங்களாலி யன்றளவு இக்குறையைத் தீர்க்கப் பிரயத்தனப்பட்டார்கள். ஹாலுக்கு மேலே கம்பிகள் கட்டினால் அவைகளின் மூலமாகப் பேசுவது நன்றாய்க் கேட்கும் என்று சிலர் சொல்ல அதையும் செய்து பார்த்தோம். அரங்கத்தின்மீது உயரத்தில் ஜமக்காளத்தைப் பரப்பினால் இக்குறை நீங்கும் என்று சிலர் சொல்ல, அதையும் பார்த்தோம். ஒன்றிலும் பயன்படவில்லை. கடைசியாக எனது தீர்மானம் என்ன வென்றால், இந்த ஹாலில் நடிக்கும்பொழுது சுயமாக பலத்த சாரீரம் இல்லாதவர்கள் பேசும் பொழுதெல்லாம், கூடிய வரையில் அரங்கத்தின் முன்பாகத்தில் வந்து நின்று பேசவேண்டு மென்பதே.

இந்த எங்கள் முதல் நாடகத்தில் நடந்த ஒரு ஹாஸ்யமால் விஷயம் எனக்கு ஞாபகமிருக்கிறது. இரண்டாவது காட்சியில் ராஜகுமாரனும், மந்திரி குமாரனான நானும் காட்டில் வேட்டையாடும் பொழுது ஒரு பன்றி, மேடையின் மீது காட்டில் ஓடுவது போல் ஓடவேண்டியிருக்கிறது. அதற்காக யுக்தி செய்து, அட்டையில் பன்றியைப்போல் வெட்டி அதற்குத்தக்கபடி வர்ணம் பூசிக்கயிற்றினால் ஒரு பக்கமிருந்து மற்றொரு பக்கம் ஓடுவது போல் செய்து வைத்தோம். மத்தியானம் அது சரியாக ஓடுகிறதாவென்று ஒத்திகை செய்து பார்த்தோம். சரியாக இருந்தது. இராத்திரி நாடகம் நடக்கும் பொழுது சரியாகவே வேண்டியபடி ஒரு பக்கமிருந்து