பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

நாடக மேடை நினைவுகள்


பிறகு நடந்த நாடகங்களில் இன்னின்ன குறையிருந்தது, இன்னின்ன விஷயங்கள் நன்றாயிருந்தது என்று எல்லோரு மாகக் கலந்து பேசினோம். அன்று முதல் சற்றேறக்குறைய இருபத்தைந்து வருஷங்கள் வரை, நாடகம் முடிந்த மறுதினம் இம்மாதிரியான கூட்டங்கள் நடத்தி வந்தோம். இவைகளுக்குப் “பகோடா மீட்டிங்” என்று பெயர் வழங்கலாயிற்று. சில வருடங்களாக இடையில் இவ்வழக்கம் இல்லாதிருந்தபோதிலும் மறுபடியும் இவ்வழக்கத்தை விடாது தொடரவேண்டுமென்று கொஞ்ச காலமாகப் பிரயத்தனப்படுகிறோம். இப்படி ஒரு நாடகத்தில் நடித்த ஆக்டர்களெல்லாம் மறுதினம் ஒருங்குகூடி, அந்நாடகத்தைப் பற்றிப் பேசுவது அதி அவசியம். அதனால் மிகவும் நலமுண்டு என்று என்னுடைய தீர்மானமான எண்ணம். இவ்வாறு ஒருங்கு சேர்ந்து ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்ள வேண்டுமென்பதல்ல என் கோரிக்கை. முக்கியமாகக் குறைகளை எடுத்துப்பேசி அவைகளைத் தீர்க்க வேண்டிய மார்க்கம் தேடுவதுதான் இப்படிப்பட்ட கூட்டத் தினாலுண்டாகும் பெரும் நன்மையாம். அன்றியும் நாடகம் நடக்கும்பொழுது ஒரு ஆக்டருக்கும் மற்றொரு ஆக்டருக்கும் மாச்சரியம் உண்டாகக்கூடும். ஒருவன் தன் வசனத்தை மறந்து மற்றொருவனுக்குக் கஷ்டமுண்டாக்கியிருக்கலாம். பாட்டிற்கு ஸ்ருதி எடுத்துக் கொடுக்க வேண்டியவன் தப்பான ஸ்ருதியை எடுத்துக் கொடுத்திருக்கலாம்; ஒருவன் அரங்கத்தில் வரவேண்டிய காலப்படி வராமல், மற்ற ஆக்டர்களுக்குக் கஷ்டம் கொடுத்திருக்கலாம் இவ்வாறு ஒரு நாடகத்தில் ஆக்டருக்கும் ஆக்டருக்கும், மனவருத்தமுண்டாக்கத்தக்க அநேக சிறு விஷயங்கள் நடந்திருக்கலாம். இவைகளை யெல்லாம் மனத்தில் அடக்கி வைத்துப் புகைய விடாது, வெளிப்படையாய் எடுத்துப் பேசி மனத்திலிருப்பதை வெளியிட்டால், இம்மாதிரியான சிறு மாச்சரியங்களெல்லாம் மனத்தில் நிற்கா. ஏதாவது தப்பு நடந்திருந்த போதிலும், ஒருவரையொருவர் மன்னித்துக் கொள்ள இது மிகுந்த அனுகூலமான சமயமாம். சென்னை ராஜதானியில் இப்பொழுது அநேக இடங்களில் கற்றறிந்தவர்கள் நாடக சபைகளை ஏற்படுத்தி யிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த “பகோடாமீட்டிங்”கை நாடகத்தின் மறுதினம் மறவாது வைக்கும்படியாக இதனால் நான் விண்ணப்பம் செய்து