பக்கம்:நாட்டியக்காரி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 தனி வனப்பு கிளுகிளுக்கும் கவிதை ஊற்று அவள். அவளிடம் அழகு எங்கே கவிதையாகப் பரிணமித் தது என்று சொல்ல முடியாது. அ ரு ம் கிலேயி லுள்ள மாதுளே மொக்கு உதடுகளிலா? ரோஜாவின் காம்பீர்ய எழிலுடன் போட்டியிடும் கன்னங்களிலா? கருங்குழலின் ஒரு நெளிவு முன் விழுந்து அழகூட்டும் துதலிலா? தகடித்திர ஒளி வெட்டும் கண்களிலா? அவளுல் பிரித்துப் பேச முடியவில்லை. அவளே கவிதை' என அவன் மனம் பேசியது. ரயிலின் இருண்ட விளக்கின் மங்கல் வெளிச்சத் திலே கூட பச்சைப் புடவை போர்த்த அச்சக்கரி அவ்விடத்திற்கே, எழில் ராணியாக, தனி அழகு கொ டுத்து விளங்கினுள். அவன் விழிகள் அடிக்கடி அவள் மீது சாடின, விளக்கின் கவர்ச்சியால் இழுப்புண்ட விட்டில் பூச்சி கள் போல, அத்தகைய சந்தர்ப்பம் ஒன்றிலேதான் அவன் அதை உணரமுடிந்தது. அவளும் தன் விழி களே கடனம் ஆட விட்டுக்கொண்டிருந்தாள், சில சம யங்களில் பார்வை மோதத்தானே வேண்டும்! ரயில் ஒடிக்கொண்டே இருந்தது, எதையும் சட்டை செய்யாத கருமமே கண் ஆயினுர் போல, அவர்கள் இருந்த வண்டியில் உள்ள சிலர் கித்திரா தேவியின் அருளால் சாமிஆடிக்கொண்டிருந்தனர். பலர் வம்பளங்து மகிழ்ங்தார்கள். சே, என்ன கூட் டம்டா அப்பா. எழவு ஜ ங் ஷ ன் எப்போ வந்து தொலையுமோ என்ற குமுற்ல் சிலரை உம்மன மூஞ்சி களாக்கிவிட்டது. ராமு சுவாரஸ்யமாக படிப்பதில் ஈடுபட்டிருந்தான். சங்திரனுக்கு இனிய பொழுது போக்கு தன்னே யாரும் கவனிக்கவில்லையே--என்று ஆராய்ந்து, பின் விழிகளை அம்மூலைக்கு விட்டெறிந்து மகிழ்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/86&oldid=782815" இலிருந்து மீள்விக்கப்பட்டது