பக்கம்:நாட்டிய ராணி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7 " அப்படியா ? சரி, திடும் திடும் போட்டே ஆடு ’ என்று குள்ளநரி உற்சாகத்தோடு சொல்லிற்று.

ஆட்டுக்குட்டி கொஞ்சநேரம் ஆடுவதும் மத்தியிலே திடும்திடும் என்று முரசை வேகமாக முழக்குவதுமாக இருந்தது.

ஏதாவது ஆபத்து வருகின்ற காலத்திலே திடும்தடும் என்று இந்த முரசு ஒசையிட்டால் உடனே பட்டிநாய்கள் அங்கே வந்துவிடும். அப்படி அவைகளைப் பழக்கிவைத்திருந்தார்கள்.


முரசின் ஒலியைக் கேட்டதும் நாய்கள் வேகமாக நாற்கால் பாய்ச்சலிலே அங்கு வந்து சேர்ந்தன. அவற்றைக் கண்டதும் குள்ளநரி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒடியே போயிற்று.

அந்தச் சின்ன ஆட்டுக்குட்டி தந்திரத்தால் உயிர் தப்பியது. அது முதல் அது தாயின் சொல்லை மீறியே நடக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/12&oldid=1064719" இலிருந்து மீள்விக்கப்பட்டது