பக்கம்:நாட்டிய ராணி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


சென்றது. தன் குஞ்சுகளுக்குத் துக்கம் வருவ தில்லை என்பதை நயமாக எடுத்துச் சொல்லிற்று: " மகாராஜா, இந்த மரத்தடியில் தாங்கள் நன்ருகத் தூங்குங்கள்; ஆல்ை கர்ஜனை செய்வதை மட்டும் வேறெங்காவது சென்று செய்யுங்கள் ” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. அதைக் கேட்ட சிங்கத்திற்குப் பெரிய கோபம் வந்துவிட்டது. “அற்பக் குருவியே, இங்கே நிற்காதே, நின்ருல் ஒரே அடியில் உன்னைக் கசக்கிப் பிழிந்துவிடுவேன் ” என்று கோபமாகச் சொல்லிற்று.

இதைக் கேட்டு அந்தச் சிறிய குருவி நடுங்கி விட்டது. அங்கிருந்து உடனே பறந்துபோய் மரத்தின் மீது உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது. அந்த மரத்திலே வசித்துக் கொண்டிருந்த சிலந்திப் பூச்சி ஒன்று குருவியிடம் நட்புக் கொண்டிருந்தது. குருவி அழுவதைப் பார்த்து, சிலந்தி அதனிடம் வந்தது. "ஏன் அழுகிருய் ? ” என்று கேட்டது. நட்ந்ததையெல்லாம் குருவி விளக்கமாகச் சொல்லிற்று.

" நான் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டேன். சிங்கராஜாவுக்குக் கோபம்தான் வந்தது. எனது சிறிய உருவத்தைப் பார்த்து அது என்னை அவ மதித்துப் பேசிவிட்டது. நான் என்ன செய்வேன்? சிங்கத்தோடு சண்டையிட என்னலாகுமா ? குஞ்சுகலை நினைத்தால்தான் எனக்கு ஒரே அழுகையாக வருகிறது ” என்று சொல்லிவிட்டு மேலும் அழத் தொடங்கியது. சிலந்தி அதற்குத் தைரியம் கூறிச் சிங்கத்தைப் பணியவைப்பதற்கு ஒரு தந்திரம் சொல்லிக் கொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/15&oldid=1064808" இலிருந்து மீள்விக்கப்பட்டது