பக்கம்:நாட்டிய ராணி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

 சிங்கம் காட்டைச் சுற்றிப்பலமுறை ஒடியதால மிகவும் களைத்துப் போய் விட்டது. அதற்கு மூச்சுவிடக்கூட முடியவில்லை. அதனால் அது குருவி கூடுகட்டியிருந்த மரத்திற்கே வந்து மூச்சுத் திணறி நின்று விட்டது.

 சிலந்தி கூறிய தந்திரத்தின்படி குருவி சிங் கத்தின் அருகே போய், "மகாராஜா, ஏன் இப்படிப் பெருமூச்சு வாங்குகிறீர்கள் ? ” என்று கேட்டது. அந்தச் சமயம் பார்த்துச் சிலந்தி மூக்கிலே புருபுரு என்று செய்ய ஆரம்பித்தது. "ஐயோ, வருதே ” என்று சிங்கம் குதித்தது. " மகாராஜா, கொஞ்சம் கீழே படுங்கள். உங்கள் மூக்கை நான் பார்க்கிறேன். எல்லாம் சரியாகிவிடும்” என்று குருவி கூறிற்று. சிங்கம் வேறு வழியறியாது கீழே படுத்தது. குருவி மூக்கின் அருகே போய் கீச்சுக்கீச்சென்று மெது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/18&oldid=1295872" இலிருந்து மீள்விக்கப்பட்டது