பக்கம்:நாட்டிய ராணி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


...திப்! ... தப் ...திப் ...தொப் ...தொப்' என்று பூமி அதிர நாட்டியமாடிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றன.

 சிங்கம் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு 'ஜம்
.. ஜம் .. ஜிம் ஜிம் ஜம்ஜிம் ஜம்ஜிம் என்று ஆடிற்று. பிறகு குருவியைப் பார்த்துச் சிங்கம், * "நீ ஒரு சிறிய குருவி என்று நான் உன்னை அற்ப மாக நினைத்துவிட்டேன். அது தவறு என்று எனக்கு இப்பொழுது தெரிகிறது. நீ எனக்கு நல்ல உதவி செய்தாய். அதனால் இனிமேல் நான் படுத் துறங்குவதற்கு இங்கு வரமாட்டேன். குஞ்சு களுக்குப் பயம் ஏற்படுமாறு இங்கு கர்ஜனையும் செய்யமாட்டேன் ” என்று கூறிவிட்டுச் சென்று விட்டது.

குருவியும் அதன் குஞ்சுகளும், சிலந்திப் பூச்சியின் தந்திரத்தால் தொல்லை நீங்கி இன்பமாக வாழ்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/20&oldid=1295875" இலிருந்து மீள்விக்கப்பட்டது