பக்கம்:நாட்டிய ராணி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ச ர் க் க ஸ் கு ர ங் கு

 ஒரு சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்த குரங் கொன்று எப்படியோ கூண்டிலிருந்து தப்பித்துக் கொண்டு ஒரு பெரிய காட்டை அடைந்தது. செல்லும்போது கூடவே தா ன் சர்க்கஸில் வேடிக்கை செய்யும்போது அணிந்து கொள்ளும் சிவப்புநிறக் கால்சட்டை, பச்சைநிறக் கோட்டு, தலையில் அணியும் தொப்பி நெஞ்சுக்கு நேராகக் கம்பீரமாக அணிந்துகொள்ளும் பதக்கங்கள், முகத்தில் பூசிக்கொள்ளும் சாயங்கள் ஆகிய இவை எல்லாம் இருந்த ஒரு பெட்டியையும் எடுத்துக் கொண்டு சென்றது. அந்தப் பெட்டியை ஓர் உயர்ந்த மரத்தின் மேல்கிளையொன்றில் மறைவாகக் கட்டி வைத்துவிட்டுக் காட்டுக்குள்ளே உல்லாச மாக ஒடியாடி விளையாடியது. தி ன் ப த ற் கு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/21&oldid=1295877" இலிருந்து மீள்விக்கப்பட்டது