பக்கம்:நாட்டிய ராணி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


யினுள் சென்று, " மகாராஜா ! குட்மார்னிங் ” என்று சலாம் செய்தது. சிங்கம் அப்பொழுது தான் படுத்து உறங்கத் தொடங்கியதால் சட் டென்று அதற்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ ஒரு புதுமாதிரியான மிருகம் அங்கு தோன்றியிருப் பதாக அது நினைத்தது. " என்ன சொன்னாய் ? ” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே கேட்டது. "குட்மார்னிங், குட்மார்னிங்” என்று குரங்கு மறு படியும் சலாம் செய்தது. " அப்படியென்றால் என்ன ? எனக்கு விளங்கவில்லையே?" என்று சிங்கம் ஆச்சரியத்தோடு கேட்டது.

உடனே குரங்கு தைரியமாக, " நீங்கள் எல் லாம் நாட்டுப்புறம். உங்களுக்கு விளங்காது ” என்றது.
 "'நாட்டுப்புறமா? " என்று மேலும் சந்தேகத் தோடு சிங்கம் கேட்டது.  இல்லை, இல்லை. நீங்கள் நாட்டுப்புறமல்ல. காட்டுப்புறம். இரண் டுக்கும் இது விளங்காது. குட்மார்னிங் என்றால் காலைவணக்கம் எ ன் று தெரிந்து கொள்ள வேண்டும். பட்டணத்திலே நாங்களெல்லாம் இப்படித்தான் காலையிலே சொல்லுவோம் ” என்றது குரங்கு. " அப்படியா ?” என்று தனது அறியாமையை ஒப்புக்கொண்டது சிங்கம். குரங்கி னிடத்திலே அ த ற் கொ ரு மரியாதையும் ஏற்பட்டது. "இவ்வளவு அதிகாலையிலே எதற்கு வந்து என் தூக்கத்தைக் கலைத்தாய் ? ” என்று கேட்டது சிங்கம்.
 "மஹாராஜா ! இப் ப டி யே தினமும் வேட்டையாடுவதும், சாப்பிடுவதும், தூ ங் கு வதுமாக இருந்தால் வாழ்க்கையிலே அலுப்பு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/23&oldid=1295880" இலிருந்து மீள்விக்கப்பட்டது