பக்கம்:நாட்டிய ராணி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


ளோடு ஒரு சின்ன குரங் மாஸ்டராக ஏற்றுக் கொள்ளவேண்டும் ” என்று கெஞ்சிக் கேட்டது. அதற்கு சர்க்கஸ் குரங்கு, ' போடா நொண்டிப் பயலே. உனக்கு என்னடா தெரியும் ? ஒடிப்போ; என் முன்னாலே நின்றால் சாட்டை அடி கிடைக் கும் ” என்று அலட்சியமாகப் பேசி அனுப்பி விட்டது. அதிலிருந்து அந்த நொண்டிக் குரங்கு பழிவாங்கவேண்டும் என்று சமயம் பார்த்துக் கொண்டு இருந்தது.

 கடைசியில் சர்க்கஸ் நடக்கும் இரவு வந்தது. காட்டுக்குள்ளே ஒரு திறந்த வெளியில் எல்லா விலங்குகளும் சிங்கராஜாவும் கூடின. அந்தத் திறந்த வெளியைச் சுற்றிலும் உயரமான மரங்கள் அடர்த்தியாக இருந்தன. மேலே கிளைகளெல் லாம் ஒரு கூடாரம்போல அந்தத் திறந்தவெளியை மறைத்துக் கொண்டு இருந்தன. குரங்மாஸ்டரின் உத்தரவுப்படி அந்த மரங்களிலெல்லாம் லட்சக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் மின்னிமின்னி வெளிச்சம் தந்துகொண்டு இருந்தன. ஐம்பது குரங்குகள் கொடிகளையும், தழைகளையும், பூக்களை யும் பறித்துவந்து தோரணங்கள் கட்டின. வாயில் பக்கத்தில் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள்' காவல் காரர்களாக நின்றன. ஒன்றின் கழுத்திலிருந்து மற். றொன்றின் கழுத்திற்குத் தோரணம் கட்டினார்கள். குள்ளநரிகள் ஊளையிட்டு வரவேற்பு அளித்தன. இப்படியாகக் கோலாகலமாக சர்க்கஸ் தொடங் கிற்று.குதிரைகளுக்குப் பதிலாக மான்கள் வட்டமாக ஒடி வித்தைகள் காட்டின. குரங்மாஸ்டர் மத்தியில் சாட்டையுடன் நின்றுகொண்டு அவைகளை வெவ் வேறு வகையாக ஓடச் செய்தது. பிறகு ஐம்பது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/26&oldid=1295890" இலிருந்து மீள்விக்கப்பட்டது