பக்கம்:நாட்டிய ராணி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

குரங்குகள் கரணம் அடிப்பதும், கிளைகளில் தாவிப் பாய்வதும், ஒன்றன் மேல் ஒன்று ஏறி நிற்பதும், மானின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஒடு வதும் இப்படி விளையாட்டுக்கள் காண்பித்தன யானைகள் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றிக் கொண்டு முன்னங்கால்களை மேலே தூக்கி சலாம் செய்தன. ஒரு யானையின் முதுகில் மற்றொரு யானே தன் முன்னங்கால்களைத் துக்கிவைத்துக் கொண்டு இரண்டும் சுற்றி வந்தன. புலி தீப்பந்த வளையத்தில் தாவிக் குதித்தது. மான் ஒன்று புலியின் முதுகில் ஏறி நிற்க மஹாராஜா அவற்றிற்கு மேல் பாய்ந்து தாண்டினார். இதைக் கண்டதும் எல்லா விலங்குகளுக்கும் ஒரே உற்சாகம் ஆகிவிட் டது. எல்லாம் மத்தியில் வந்து கரணம் அடிப்பதும் குதிப்பதும் நடனம் ஆடுவதுமாக இருந்தன. அந்த சமயம் பார்த்து நொண்டிக்குரங்கு யாருக்கும் தெரியாமல் ஒரு மரத்தின் மேலே ஏறியது. திறந்த வெளி மேலே நீண்டு வளர்ந்திருக்கும் ஒரு கிளையில் தொங்கிய பெரிய மலைத்தேன் கூட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/27&oldid=1295894" இலிருந்து மீள்விக்கப்பட்டது