உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முத்து மாலை

ஆலமரத்தில் ஒரு காக்கை கூடு கட்டியிருந்தது. அந்த மரத்தின் கீழே ஒரு புற்று இருந்தது. அந்தப் புற்றில் ஒரு பாம்பு வசித்துவந்தது. அந்தப் பாம்பு பொல்லாத பாம்பு! அது அடிக்கடி மரத்தின் மேல் ஏறி, காக்கையின் முட்டைகளை உடைத்துச் சாப்பிட்டுவிடும்.

இதனால் காக்கை வருத்தப்பட்டது. நரியிடம் யோசனை கேட்டது.