இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நரி ஒரு யோசனை சொன்னது அதைக் கேட்டதும், “சரியான யோசனை. நான் அப்படியே செய்கிறேன்” என்றது காக்கை.
உடனே காக்கை நேராக அரண்மனைக்குச் சென்றது. அரசகுமாரி குளிக்கும் இடத்தில் காத்துக்கொண்டிருந்தது.
அரசகுமாரி அங்கே வந்தாள். நகைகளைக் கழற்றி ஒரு பக்கமாக வைத்துவிட்டுக் குளித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய முத்து மாலையைக் காக்கை தூக்கிக்கொண்டு பறந்தது. உடனே அரசகுமாரி கூச்சல் போட்டாள். அரண்மனைச் சேவகர்கள் காக்கையைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள்.