பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 காக்கை முத்து மாலையைப் பாம்புப் புற்றில் போட்டுவிட்டு மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது. சேவகர்கள் புற்றின் பக்கத்திலே போனார்கள். உள்ளே முத்து மாலை கிடந்ததால் புற்றை இடித்தார்கள். அப்போது உள்ளேயிருந்த பாம்பு புஸ் என்று சீறிக்கொண்டு வெளியே வந்தது.