பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான்கு நண்பர்கள்

ஒரு காடு. அந்தக் காட்டில் ஒரு காக்கை இருந்தது. ஒர் எலி இருந்தது. ஒரு மான் இருந்தது. ஓர் ஆமை இருந்தது. இந்த நான்கும் நண்பர்கள்.

ஒருநாள் மேயப்போன மான் திரும்பி வரவில்லை. வெகுநேரம் வரை வரவில்லை. காக்கையும், எலியும், ஆமையும், ‘மான் எப்போது வரும் ? எப்போது வரும்?’ என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தன. மான் வரவே இல்லை !