பக்கம்:நான்மணிகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 நான்மணிகள்

நல்லொழுக்கம் சிறந்த செல்வத்தை ஒக்கும்; முறை யான இல்லறம் துறவறத்தை ஒக்கும்; நட்பினரைப் புறங் கூறல் கொலை செய்வதை ஒக்கும்; மதியாதார் மனை செல்லல் பேரிழிவை ஒக்கும். (6)

கள்ள மனம் கொணடவர்க்கும் தூக்கம் இல்லை; காதல் உளம் கொண்டவரும் துயில்தல் இல்லை; ஒண் பொருளைச் சேர்ப்பவரும் உறங்கல் இல்லை; ஊர் காக்கும் மக்களுக்கோ உறக்கம் இல்லை. (7)

கடந்த காலத் துன்பம் கற்றவரின்முன் தோன்றாது. உழைப்பின் துன்பம் ஊக்கத்தின் முன் தோன்றாது; தீமை யைச் செய்பவர்முன் அறம் தோன்றாது; சினத்தை அடை பவர்முன் நலம் தோன்றாது. (8)

நிலத்திற்கு அழகு நெல்லும் கரும்பும், குளத்திற்கு அழகு தாமரை மலரகள்: பெண்மைக்கு அழகு நாணம் உடைமை; ஆண்மைக்கு அழகு அறத்தைக் காத்தல். (9)

யானையைக் கட்டுத்தறியினால் வயப்படுத்துவர்; நல்ல பாம்பை மகுடியினால் வயப்படுத்துவர்: கீழ் மக்களைக் கண்டிப்பினால் வயப்படுத்துவர்: சான்றோரை இன்சொல்லால் வயப்படுத்துவர் (10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/10&oldid=587195" இருந்து மீள்விக்கப்பட்டது