இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நான்மணிக்கடிகை 11
கன்றாமை வேண்டும் கடிய, பிறர்செய்த நன்றியை நன்றாகக் கொளல் வேண்டும் - என்றும் விடல்வேண்டும் தங்கள் வெகுளி, அடல் வேண்டும் ஆக்கஞ் சிதைக்கும் வினை. (11)
பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாங் கொல்லேறு கோட்டான் நோய்செய்யுங் குறித்தாரை - ஊடி முகத்தான் நோய்செய்வர் மகளிர், முனிவர் - தவத்தாற் தருகுவர் நோய். (12)
பறைநன்று பண்ணமையா யாழின் நிலைநின்ற பெண்ணன்று பீடிலா மாந்தரின் -பண்ணழிந் தார்தலின் நன்று பசித்தல், பசைந்தாரின் தீர்தலிற் தீப்புகுதல் நன்று. (13)
வளப்பாத்தி யுள் வளரும் வண்மை, கிளைக்குழாம் இன்சொற் குழியுள் இனிதெழுஉம் - வன்சொல் சரவெழுஉங் கண்ணில் குழியுள் இரவெழுஉம் இன்மைக் குழியுள் விரைந்து. (14)
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு செல்வது வேண்டின் அறஞ்செய்க, வெல்வது வேண்டின் வெகுளி விடல். (15)