பக்கம்:நான்மணிகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை 13

கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்கும் - தோமில் தவக்குட்டந் தன்னுடையா னிந்தும் அவைக்குட்டங் கற்றான் கடந்து விடும், (16)

பொய்த்த லிறுவாய நட்புக்கண் மெய்த்தாக மூத்த லிறுவாய்த் திளநலந் துரக்கில் மிகுதி யிறுவாய செல்வங்கள் தத்தம் தகுதி யிறுவாய்த் துயிர். (17)

மனைக்காக்க மாண்ட மகளிர் ஒருவன் வினைக்காக்கஞ் செவ்விய னாதல் - சினச்செவ்வேல் நாட்டாக்க நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம் கேளிர் ஒரீஇ விடல். (18)

பெற்றான் அதிர்ப்பிற்பிணையன்னான தாள்திர்க்கும் கற்றான் அதிர்ப்பிற் பொருளதிர்க்கும்-பற்றிய மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பாட லதிர்ந்து விடும் (பண்ணதிர்ப்பின் (19)

மனைக்குப்பாழ் வாணுதல் இன்மை, தான்செல்லுந் திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை - இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை, தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு (20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/15&oldid=587215" இருந்து மீள்விக்கப்பட்டது