பக்கம்:நான்மணிகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 நான்மணிகள்

கொல்வதற்கென்று உயிர்களை வளர்ப்பதும் குற்றம்: கொல்லப்பட்டவைகளை வாங்கி உண்பதும் குற்றம்; உயிர் களைக் கொல்லும்படி சொல்வதும் குற்றம்; அவ்வாறின் றித் தாமே கொல்லுவதும் குற்றம். (26)

மன்னனின் ஆட்சியைக் கண்டு மகிழ்வர் குடிகள்; தாயின் பாலைக் கண்டு மகிழும் குழந்தைகள்; வானத்து மழையைக் கண்டு மகிழும் உயிர்கள்; மக்களின் சாவைக் கண்டு மகிழ்வான் நமன். (27)

அறிவு நூல்களைக் கற்பவன் அறியாமைலிருந்து விலகு வான்; அறியாமையிலிருந்து விலகியவன் அறிவுடைமை பெறுவான்; அறிவுடைமை பெற்றவன் நன்னெறியிற் நிற் பான்; நன்னெறியில் நிற்பவன் நற்பேறு பெறுவான். (28)

பள்ளமுள்ளவிடத்து நீர் நிலைத்து நிற்கும்; பழிக்கஞ் சாரிடத்துப் பாவம் சென்று நிற்கும்; தி நெறியாரிடத்து ஆசை வளர்ந்து நிற்கும்; அருளுடையாரிடத்து அறிவு துணை நிற்கும். (29)

செய்வத்தைப்போல் வலிமையுடையது வேறில்லை; கல்வியைப்போலத் துணையாவது வேறில்லை; வறுமை யைப் போலத் துன்பமானது வேறில்லை; ஈகையைப் போலச் சிறப்பானது வேறில்லை. . (30)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/18&oldid=587227" இருந்து மீள்விக்கப்பட்டது